பிடிவாதமான மனைவிகளை அடக்க அவர்களை மெதுவாக அடிக்க வேண்டும் என்று கணவர்களுக்கு அறிவுரை கூறிய மலேசிய பெண் அமைச்சர் ஒருவர் உலகம் முழுவதும் கடுமையாக விமர்சிக்கப்பட்டு வருகிறார். பெண்கள் மற்றும் குடும்பதுணை அமைச்சர் சிதி ஜைலா மொஹத் யுசாஃப், கணவர்கள் தங்கள் பிடிவாதமான மனைவிகளைப் பிரிந்து உறங்குமாறும் அறிவுறுத்தினார்.
இன்ஸ்டாகிராமில் ‘அம்மாவின் உதவிக்குறிப்புகள்' என்ற பெயரில் வெளியிடப்பட்ட இரண்டு நிமிட வீடியோவில் பேசிய அமைச்சர், கணவர்கள் தங்கள் பிடிவாதமான மனைவிகளை அவர்களிடம் பேசுவதன் மூலம் ஒழுங்கு செய்ய அறிவுறுத்தினார். அவர்கள் தங்கள் நடத்தையை மாற்றிக் கொள்ளவில்லை என்றால், ஆண்கள் மூன்று நாட்களுக்கு அவர்களைத் தவிர்த்து தூங்குமாறு அறிவுறுத்தினார்.
தொடர்ந்து அவர் பேசுகையில், “மனைவி இன்னும் ஆலோசனையை ஏற்க மறுத்தால், அவரது நடத்தையை மாற்றினால், கணவன்கள் மனைவியை மெதுவாகத் தாக்கி, கண்டிப்பைக் காட்டவும், எவ்வளவு விரும்புகிறார் என்பதைக் காட்டவும் உடல் தொடுதல் அணுகுமுறையை முயற்சிக்கலாம்” என்றார்.
பான்-மலேசியன் இஸ்லாமியக் கட்சியின் எம்.பி., பெண்களும், கணவனை வென்றெடுப்பதற்காக, அனுமதி கேட்டு ஓக்கே சொன்னால் மட்டுமே கணவரிடம் பேச வேண்டும் என்று வலியுறுத்தினார். “உங்கள் கணவர்கள் அமைதியாக, சாப்பிட்டு முடித்து, பிரார்த்தனை செய்து, நிம்மதியாக இருக்கும்போது அவர்களிடம் பேசுங்கள். பேச விரும்பும்போது முதலில் அனுமதி கேளுங்கள்” என்றும் கூறினார்.
இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அமைச்சரின் இந்தப் பேச்சுக்கு உலகம் முழுவதும் இருந்து எதிர்ப்புகள் கிளம்பியுள்ளன.
வீடியோ:
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்