கிழக்கு ஆஸ்திரேலியாவில் 93 மில்லியன் ஆண்டுகள் பழமையான முதலையின் வயிற்றில் டைனோசர் குட்டி ஒன்றை விஞ்ஞானிகள் கண்டறிந்தது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. மேலும் முதலைகள் டைனோசர்களை சாப்பிட்டதற்கான முதல் சான்றாகவும் இது உள்ளது.


உயிரினங்களின் பரிணாம வளர்ச்சி, எத்தனை ஆண்டு காலத்திற்கு முன்னதானது என்பது போன்ற அனைத்து விஷயங்களையும் விஞ்ஞானிகளின் ஆய்வின் மூலம் தெரியவருகிறது. அப்படி கிழக்கு ஆஸ்திரேலியாவின் முதலையின் மீது நடத்தப்பட்ட ஆய்வில் வெளியான தகவல், அனைவரையும் ஆச்சரியத்தில் ஏற்படுத்தியது. விஞ்ஞானி ஜோசப் பெவிட் ஆய்வின் சுமார் 95 மில்லியன் ஆண்டுகள் பழமையான புதியவகை முதலையின் எச்சங்கள் ஆஸ்திரேலியாவில் கண்டுபிடிக்கப்பட்டது.


மேலும் ஆய்வின முடிவுகள் தெளிவாக  இருக்க வேண்டும் என்பதற்காக அதிநவீன ஆய்வுகள் நடத்தப்பட்டது. அதில் டைனோசரின் உணவு சங்கிலி குறித்த வியப்பூட்டும் தகவல்கள் வெளியாகியுள்ளது. குறிப்பாக ஆஸ்திரேலியாவின் முதலைகள் டைனோசர்களைச் சாப்பிட்டதற்கான முதல் சான்று எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. முன்னதாக கடந்த 2020 ஆம் ஆண்டு ஆகஸ்டில் ஆராய்ச்சியாளர்கள் பயங்கர முதலைகளின் புதைபடிவங்களைக் கண்டுபிடித்தனர். அவை பெரிய டைனோசர்களை சாப்பிட்டதாகவும் கண்டறியப்பட்டுள்ளது.



இந்த முதலை சுமார் 95 மில்லியன் ஆண்டுகள் பழமையானது எனவும், இவை இறுதி உணவாக டைனோசரைச் சாப்பிட்டதை ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்தனர். ஆய்வில் சுமார் 85 சதவீதம் உடல் மீட்கப்பட்டபோதிலும் அதன் வால் மற்றும் கைகால்களை காணவில்லை. ஆனால் கிட்டத்தட்ட முழுமையான மண்டையோடு இருந்தது. அதன் பின்னர் ஆராய்ச்சியாளர்கள் எக்ஸ்ரே மற்றும் கணினி வரைவி ஊடுகதிர் மூலமாக எச்சங்களுக்குள் என்ன எலும்புகள் இருந்தது என கண்டறியப்பட்டது. அப்போது தான் வியூப்பூட்டும் தகவலாக முதலை டைனோசர் குட்டியை விழுங்கியுள்ளது தெரியவந்தது. இதுகுறித்த தகவல் சோசியல் மீடியாவில் வைரலான நிலையில், இன்னமும் எத்தனை சுவாரஸ்சியமான விஷயங்கள் உள்ளது என்றும், அதனைக் கண்டுபிடியுங்கள் மற்றும் இந்த ஆய்வைத் தொடருங்கள் எனவும் நெட்டிசன்கள் சமூக வலைத்தளங்களில் பகிர்ந்து வருகின்றனர்.  






முன்னதாக கடந்த 2015 ஆம் ஆண்டு விஞ்ஞானி டாக்டர் ஜோசப் பெவிட் ஆய்வு நடத்தியதில், கோழி எலும்பைப்போல, புதைக்கப்பட்ட எலும்பைக் கண்டேன் எனவும் அப்போதே டைனோசர் என்பதை நினைத்தேன் என்று தெரியவந்துள்ளதாக விஞ்ஞானி தெரிவித்துள்ளார்.