உலகம் முழுவதும் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. அந்தவகையில் தற்போது மீண்டும் ஒரு குற்றம் நடைபெற்றுள்ளது. கணவர் ஒருவர் தன்னுடைய மனைவியை கொலை செய்து சடலத்துடன் ஒரு வாரம் வசித்துள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
அமெரிக்காவின் மிச்சிகன் பகுதியைச் சேர்ந்தவர் சார்ல்ஸ் ஷேர்வூட்(47). இவருக்கும் சுசன் கிளப்ஸ்சு என்பவருக்கும் திருமணம் நடைபெற்றுள்ளது. இவர்கள் இருவரும் ஓக்லாந்து பகுதியில் உள்ள வீட்டில் வசித்து வந்துள்ளனர். இவர் இவருக்கும் கொரோனா தொற்று பரவும் வேகத்தைப் பார்த்து பயம் ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக கணவன்-மனைவி ஆகிய இருவரும் தற்கொலை செய்து கொள்ள திட்டமிட்டுள்ளதாக தெரிகிறது.
இதற்காக சார்ல்ஸ் ஷேர்வூட் தன்னுடைய மனைவி சுசனை கொலை செய்துள்ளதாக கூறப்படுகிறது. அதன்பின்னர் ஷேர்வூட்டும் தற்கொலை செய்ய முயற்சி செய்துள்ளதாக தெரிகிறது. எனினும் அவர் பயத்தில் தன்னுடைய மனைவியின் சடலத்துடன் சுமார் ஒரு வாரம் காலம் வசித்து வந்துள்ளதாக தெரியவந்துள்ளது. இந்த தம்பதி இருவரும் ஒரு வாரத்திற்கு மேலாக வெளியே வரவில்லை என்று காவல்துறைக்கு அப்பகுதி மக்கள் புகார் அளித்துள்ளனர்.
இந்தப் புகாரின் பெயரில் காவல்துறையினர் விசாரணை நடத்தியுள்ளனர். அப்போது வீட்டிற்குள் வந்து பார்த்த போது ஷேர்வூட் படுக்கை அறையில் தன்னுடைய மனைவியின் சடலத்துடன் அமர்ந்துள்ளார். அதைத் தொடர்ந்து அவரை கைது செய்து காவல்துறையினர் விசாரண செய்துள்ளனர். அதில் அவர் கொரோனாவிற்கு பயந்து அவர்கள் போட்டிருந்த தற்கொலை திட்டத்தை கூறியுள்ளார். மேலும் அவர் தற்கொலை செய்ய முயற்சி செய்ததையும் கூறியுள்ளார்.
சுசனின் உடலை பிரேத பரிசோதனைக்கு அனுப்பியதில் அவர் இறந்து ஒரு வாரத்திற்கும் மேலாக ஆகியுள்ளது தெரியவந்துள்ளது. இந்த ஆதாரங்களுடன் ஷேர்வூட்டை நீதிமன்றத்தில் காவல்துறையினர் ஆஜர் படுத்தியுள்ளனர். இந்த வழக்கை விசாரித்த நீதிபதி ஷேர்வூட்டிற்கு சுமார் 38 ஆண்டுகள் வரை சிறை தண்டனை அளிக்க உத்தரவிட்டுளார். கொரோனா பயத்தால் மனைவியை கொன்று கணவர் சிறை சென்றுள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
எந்த ஒரு பிரச்னைக்கு தற்கொலை தீர்வாகாது. மன அழுத்தம் ஏற்பட்டாலோ, தற்கொலை எண்ணம் உண்டானாலோ, அதில் இருந்து மீண்டு மாற்றம் ஏற்பட கீழ்க்காணும் சேவை எண்களுக்கு தொடர்பு கொண்டு பேசவும்.
மாநில உதவிமையம் : 104 சினேகா தற்கொலை தடுப்பு உதவி மையம் - 044 -24640050
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்