Lunar Eclipse : 2023-ஆம் ஆண்டின் முதல் சந்திர கிரகணம்... எப்போ தெரியுமா? எங்கெல்லாம் பார்க்க முடியும்...?

நடப்பாண்டில் முதல் சந்திர கிரகணம் மே மாதம் 5-ஆம் தேதி இரவு நடக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

Continues below advertisement

Lunar Eclipse : நடப்பாண்டில் முதல் சந்திர கிரகணம் மே மாதம் 5-ஆம் தேதி இரவு நடக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

Continues below advertisement

சந்திர கிரகணம்

வானில் ஏற்படும் மாற்றங்களில் சந்திர கிரகணம் மற்றும் சூரிய கிரகணம் மிகவும் முக்கியமான நிகழ்வுகளில் ஒன்றாகும். சந்திர கிரகணம் என்பது சூரியன், பூமி, சந்திரன் ஆகியவை ஒரே நேர்கோட்டில் வரும்போது சந்திர கிரகணம் ஏற்படுகிறது. அதாவது, சூரியன், சந்திரன் இடையே ஒரே நேர்கோடில் பூமி வருவதால் பூமியின் நிழல் சந்திரன் மேற்பரப்பில் விழுவதால், அது மறையும் நிகழ்வே சந்திரன் கிரகணம் என்று சொல்லப்படுகிறது.

பெனும்பிரல் சந்திர கிரகணம்

சந்திர கிரகணத்தில் மூன்று வகைகள் உள்ளன. முழு சந்திர கிரகணம், பகுதி சந்திர கிரகணம், பெனும்பிரல் சந்திர கிரகணம். இதில் 2023-ஆம் ஆண்டின் முதல் சந்திர கிரகணம் பெனும்பிரல் (penumbral eclipse) சந்திர கிரகணம் ஆகும். இந்த பெனும்பிரல் சந்திர கிரகணம் என்பது சந்திரனுக்கும் சூரியனுக்கும் இடையே பூமி கடக்கும்போது சூரியனின் ஒளியை மறைத்து சந்திரனின் மேற்பரப்பில் நிழலை விழச்செய்யும்போது ஏற்படுகிறது. 

இந்த பெனும்பிரல் (penumbral eclipse) என்று அழைக்கப்படும் சந்திர கிரகணம் மே மாதம் 5ஆம் தேதி வெள்ளிக்கிழமை நிகழ்கிறது. இந்த கிரகணம் தனித்தன்மை வாய்ந்தது. என்னென்றால் இந்த கிரகணம் 19 ஆண்டுகளுக்கு நிகழாது. அதாவது அடுத்த பெனும்பிரல் சந்திர கிரகணம் 2042ஆம் ஆண்டு செப்டம்பர் மாதத்தில் நிகழும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 

எப்போது?

இந்நிலையில், பெனும்பிரல் சந்திரன் கிரகணம் மே மாதம் 5-ஆம் தேதி வெள்ளிக்கிழமை நிகழ்கிறது. இந்த சந்திர கிரகணமானது இரவு 8.44 மணிக்கு தொடங்கி நள்ளிரவு 01.01 மணிக்கு முடிவடைகிறது. இந்த கிரகணம் சுமார் 4 மணிநேரம் 18 நிமிடங்கள் வரை நீடித்திருக்கும். 

இந்த ஆண்டின் முதல் சந்திர கிரகமானது இந்தியாவில் காண முடியாது. ஆனால் ஆசியாவின் பிற பகுதிகள், வடக்கு மற்றும் தென் அமெரிக்கா, ஆஸ்திரேலியா, வடக்கு அட்லாண்டிக் பெருங்கடல், பசிபிக் பெருங்கடல் ஆகியவற்றில் வசிப்பவர்கள் இந்த வானியல் நிகழ்வைக் காண முடியும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், இந்த கிரக நகர்வினால் சில ராசிக்காரர்களுக்கு தாக்கம் ஏற்படும் என்று சொல்லப்படுகிறது. அதாவது, மேஷம், ரிஷபம், கடகம், சிம்மம் ஆகிய ராசிக்காரர்களுக்கு தாக்கத்தை ஏற்படுத்துவதாக ஜோதிடத்தை நம்புபவர்களால் நம்பப்படுகிறது. இதனை அடுத்து, இந்த ஆண்டின் அடுத்த சந்திர கிரகணம் அக்டோபர் 28ஆம் தேதி நிகழும் என்பது குறிப்பிடத்தக்கது.


மேலும் படிக்க

Amazon Layoff : பணிநீக்கத்தை மீண்டும் கையில் எடுத்த அமேசான்... மேலும் 9 ஆயிரம் பேருக்கு ஆப்பு...!

Andhra Pradesh Farmer: ஆந்திர முதல்வர் ஜெகன் மோகனின் கான்வாயை மறித்த விவசாயிகள்… வைரலாகும் வீடியோ! என்ன காரணம்?

Continues below advertisement