மிஸ் யுனிவர்ஸ் 2021: இந்தியாவின் நடிகையும்,மாடலுமான ஹர்னாஸ் கவுர் சந்து மிஸ் யுனிவர்ஸ் 2021 போட்டியில் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டார். சுஷ்மிதா சென் மற்றும் லாரா தத்தாவுக்குப் பிறகு பட்டம் வென்ற 3வது நபர் என்ற பெருமையைப் பெற்றார். பட்டம் வென்ற  ஹர்னாஸ் கவுர் சந்தை தொடர்ந்து, தென்னாப்பிரிக்காவின் லலேலா ஸ்வானே இரண்டாவது ரன்னர்-அப் ஆகவும், பராகுவேயின் நதியா ஃபெரீரா முதல் ரன்னர்-அப் ஆகவும் அறிவிக்கப்பட்டனர்.


 






ஹர்னாஸ் கவுர் சந்து கடந்த 2017 ம் ஆண்டு மிஸ் சண்டிகர் பட்டத்தையும், 2019 ம் ஆண்டு மிஸ் பஞ்சாப் பட்டத்தையும் வென்றவர் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும், கிட்டத்தட்ட 21 ஆண்டுகளுக்குப் பிறகு, தற்போது தான் இந்தியாவைச் சேர்ந்த ஒருவர் பிரபஞ்ச அழகியாக தேர்வு செய்யப்பட்டுள்ளார். இதற்கு முன்னதாக, 2000 ல் லாரா தாத்தா மற்றும் 1994 ல் சுஷ்மிதா சென் பிரபஞ்ச அழகியாக தேர்வானார்கள். 


இந்தநிலையில், இந்தியாவிலிருந்து மிஸ் யுனிவர்ஸ் வென்றவர்களின் பட்டியல் பின்வருமாறு : 


1. சுஷ்மிதா சென் -1994 : 


19 நவம்பர் 1975 ல் பிறந்த சுஷ்மிதா சென், ஒரு இந்திய நடிகை, மாடல் மற்றும் மிஸ் யுனிவர்ஸ் 1994 போட்டியில் வென்றவர். அவர் 18 வயதில் ஃபெமினா மிஸ் இந்தியா 1994 இல் முடிசூட்டப்பட்டார். இந்த போட்டியில் வெற்றி பெற்ற முதல் இந்தியர் என்ற பெருமையும் பெற்றார். 




பீவி நம்பர் 1 என்ற நகைச்சுவைத் திரைப்படத்தில் நடித்ததற்காக சிறந்த துணை நடிகைக்கான பிலிம்பேர் விருதையும் வென்றார். சுஷ்மிதா சென், சிர்ஃப் தும் (1999) மற்றும் ஃபில்ஹால்(2002) ஆகிய படங்களில் நடித்ததற்காக பிலிம்பேர் விருது பிரிவில் பரிந்துரை செய்யப்பட்டார். 


2. லாரா தாத்தா - 2000 : 




 16 ஏப்ரல் 1978 ல் பிறந்த லாரா தாத்தா ஒரு இந்திய நடிகை, தொழில்முனைவோர் மற்றும் மிஸ் யுனிவர்ஸ் 2000 போட்டியில் பட்டம் வென்றவர்.இவர் 1997 இல் மிஸ் இன்டர்காண்டினென்டல் ஆக முடிசூட்டப்பட்டார். இந்தி படங்களில், அவர் ஆண்டாஸ் (2003) மூலம் அறிமுகமாகி, அதில் சிறந்த பெண் அறிமுகத்திற்கான பிலிம்பேர் விருதையும் வென்றார். 


3. ஹர்னாஸ் கவுர் சாந்து - 2021 : 




21 வயதான ஹர்னாஸ் கவுர் சந்து சண்டிகரை சேர்ந்த சீக்கிய குடும்பத்தைச் சேர்ந்தவர்.இவர் சண்டிகரில் உள்ள அரசு கல்லூரி பெண்களில் உயர் கல்வி பயின்றார். இவருக்கு குதிரை சவாரி, நடிப்பு, பாடுவது போன்றவை பொழுதுபோக்காகும். 


மிஸ் யுனிவர்ஸ் 2021 ம் ஆண்டின் டாப் 10 பட்டியல் : 


மிஸ் யுனிவர்ஸ் 2021 - ஹர்னாஸ் சந்து


1 வது ரன்னர் அப் - நதியா ஃபெரீரா


2 வது ரன்னர் அப் - லலேலா மஸ்வானே


4 வது இடம் - வலேரியா அயோஸ்


5 வது இடம் -  பீட்ரைஸ் கோம்ஸ்


6 வது இடம் - தெசலி சிம்மர்மேன்


7வது இடம் - கிளெமென்ஸ் போடினோ


8 வது இடம் - மைக்கேல் காலன்


9 வது இடம் - சாண்டல் ஓ'பிரையன்


10 வது இடம் - எல்லே ஸ்மித்


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


 


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


 


பேஸ்புக் பக்கத்தில் தொடர


 


ட்விட்டர் பக்கத்தில் தொடர


 


யூடியூபில் வீடியோக்களை காண