பொதுவாக உபர், ஒலா உள்ளிட்ட கேப் கார்களில் செல்லும் போது பெரும்பாலும் நமக்கும் அந்த வண்டியின் ஓட்டுநருக்கும் எந்தவித உரையாடலும் இருக்காது. அப்படி இருந்தாலும் எங்கே இறங்க வேண்டும் என்பது தொடர்பாக தான் இருக்கும். ஆனால் ஒரு மாற்றுத்திறனாளி கேப் ஓட்டுநர் தன்னுடைய வாடிக்கையாளர்களுக்கு ஒரு அறிவிப்பை ஒட்டியுள்ளார். அது நம்மை மிகவும் நெகிழ்ச்சி அடைய செய்யும் வகையில் அமைந்துள்ளது. இதை அந்த காரில் பயணம் செய்த ஒருவர் படம் எடுத்து தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். 


லண்டன் பகுதியில் உபர் காரில் ஜெரமி என்ற நபர் அண்மையில் பயணம் செய்துள்ளார்.  அப்போது அவர் சந்தித்த உபர் ஒட்டுநர் தொடர்பாக ஒரு பதிவை செய்துள்ளார். இதுகுறித்து அவர் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில், “இது நான் பயணம் செய்த சிறப்பான உபர் கேப் டாக்ஸியில் இருந்தது” எனக் கூறி அந்த அறிவிப்பு படத்தை பதிவிட்டுள்ளார். அந்த அறிவிப்பில், “நான் தான் உங்களுடைய ஓட்டுநர் ஆனர். எனக்கு செவி திறன் குறைபாடு உள்ளது. எனவே எனக்கு ஏதாவது சொல்ல வேண்டும் என்றால் குறுஞ்செய்தி மூலம் சொல்லவும். கார் நிறுத்திய பிறகு ஏதாவது சொல்ல வேண்டும் என்றால் அந்த நோட் பேடில் எழுதி காட்டலாம். காரில் உள்ள ஆடியோ சிஸ்டத்தை பயன்படுத்தி பாடல்களை நீங்கள் கேட்டு கொள்ளலாம். என்னை ஏற்று கொண்டதற்கு நன்றி. உங்களுடைய நாள் சிறப்பாக அமைய வாழ்த்துகள்” என்று தெரிவித்துள்ளார். 






இந்த அறிவிப்பை அந்த நபர் படமாக எடுத்து ட்விட்டரில் பதிவிட்டவுடன் பலரும் இது தொடர்பாக தங்களுடைய கருத்துகளை ட்விட்டர் பதிவிட்டு வருகின்றனர். அதில் பலரும் அந்த ஓட்டுநரின் செயலை பாராட்டி வருகின்றனர். அத்துடன் இது அன்பு சூழந்த உலகம் என்பதை இவருடைய எழுத்துகள் காட்டுகின்றன என்றும் கூறி வருகின்றனர். 






















இவ்வாறு பலரும் தங்களுடைய கருத்துகளை தெரிவித்து வருகின்றனர். 


மேலும் படிக்க: என்னா வேகம்...! காரை பீட் செய்த நெருப்புக்கோழி.. வீடியோ!