பிரபல ஹாலிவுட் பாடகர்களில் ஒருவர் கேட்டி பெர்ரி. இவர் தன்னுடைய இசை நிகழ்ச்சிகள் எப்போது ரசிகர்களிடம் மிகவும் பிரபலம். இந்த நிகழ்ச்சியை நேரிலும் தொலைக்காட்சியிலும் பலரும் பார்த்து ரசித்து மகிழ்வார்கள். அந்த இசை நிகழ்ச்சிகளில் இவரின் உடை அணிகலன்கள் ஆகியவையும் ரசிகர்களை அதிகளவில் ஈர்க்கும் வகையில் அமைந்திருக்கும். அந்தவகையில் சமீபத்தில் இவருடைய இசை நிகழ்ச்சியில் அவர் அணிந்த இருந்த ஆடை பேசு பொருளாக மாறியுள்ளது. 


 


அதாவது கடந்த சில நாட்களுக்கு முன்பாக நடைபெற்ற இசை நிகழ்ச்சி ஒன்றுக்கு அவர் பீர் பாட்டில் கேன் போன்ற உள்ளாடை வடிவ ஆடையை அணிந்து வந்துள்ளார். அத்துடன் அந்த கேனில் இருந்து அவர் பாடிக் கொண்டிருக்கும் போது உள்ளே இருந்த பீரை ஒரு கண்ணாடி கிளாசில் பிடித்துள்ளார். இதைப் பார்த்த பலரும் இது குறித்து தங்களுடைய கருத்துகளை ட்விட்டரில் பதிவிட்டுள்ளனர். 


 






அதில் ஒரு சிலர் இது மிகவும் தேவையில்லாத  செயல். இவர் இதுபோன்ற உடைகளை அணிந்து பீர் குடிப்பதை ஊக்குவிக்கிறாரா? என்பது போல் சிலர் கேள்வி எழுப்பி வருகின்றனர். மற்ற சிலர் இது உண்மையாகவே பீருடன் தயாரிக்கப்பட்ட ஆடையா என்பது சில கேள்விகளையும் முன்வைத்து வருகின்றனர். 


 






 






 






 






 


இதனால் அவருடைய சமீபத்திய இசை நிகழ்ச்சி பெருமளவில் பேசு பொருளாக மாறியுள்ளது குறிப்பிடத்தக்கது. 


மேலும் படிக்க: நாட்டுக்காக கொஞ்சமா சாப்பிடுறாரு - கிம் ஜாங் உன் குறித்து சொன்ன அதிகாரிகள்