அமெரிக்காவில் உள்ள லாஸ் வேகஸ் விமான நிலையத்தில் துப்பாக்கிச்சூடு நடைபெற்றதாக தகவல் வெளியான நிலையில், அதற்கு தற்போது காவல்துறை தரப்பில் மறுப்பு தெரிவிக்கப்பட்டுள்ளது. துப்பாக்கிச்சூடு நடைபெற்றதற்கு எந்த ஒரு ஆதாரமும் இல்லை என விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.
முனையம் ஒன்றில் பயங்கர சத்தம் கேட்டதையடுத்து, அப்பகுதியில் உள்ள மக்கள் அதிர்ச்சிக்கு உள்ளாகினர். அடையாளம் தெரியாத நபர் ஒருவரே அந்த சத்தத்திற்கு காரணம் என்றும் அவரை தற்போது கைது செய்துள்ளதாகவும் லாஸ் வேகஸ் காவல்துறை தெரிவித்துள்ளது.
முன்னதாக, விமான நிலையத்தில் பயங்கர சத்தம் கேட்டு மக்கள் அலறி ஓடும் காட்சி சமூக வலைதங்களில் வெளியாக பரபரப்பை ஏற்படுத்தியது. பொய்யான எச்சரிக்கை விடுக்கப்பட்டிருப்பதாகவும் விமான நிலையத்திற்கு எந்த விதமான அச்சுறுத்தலும் இல்லை என்றும் ஹாரி ரீட் சர்வதேச விமான நிலையத்தின் அதிகார ட்விட்டர் பக்கத்தில் தெரிவிக்கப்பட்டது.
இதையடுத்து வெளியான பதிவில், "இன்று காலை ஹாரி ரீட் சர்வதேச விமான நிலையத்தில் பெரும் சத்தம் பீதியை ஏற்படுத்தியது. பாதுகாப்பு தொடர்பா சம்பவத்தை உருவாக்கியது. செயல்பாடுகள் இயல்பு நிலைக்கு திரும்பி வரும் நிலையில் இன்று பயணம் செய்பவர்களின் பொறுமையை நாங்கள் பாராட்டுகிறோம்.
பல்வேறு விதமான சோதனைகள் நடத்தப்பட்டதால் விமானங்கள் தாமதம் ஆகியுள்ளது. மேலும் விமானத்தில் ஏறும் முன் அனைத்து பயணிகளுக்கும் பாதுகாப்பு சோதனைச் சாவடிகளில் மீண்டும் சோதனை நடத்தப்படும்" எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்