குவைத்தில் இந்திய அரசுக்கு எதிராக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட வெளிநாட்டவர்களை நாடு கடத்த அந்நாட்டு அரசு முடிவெடுத்துள்ளது. 


கடந்த சில தினங்களுக்கு முன் பாஜக செய்தி தொடர்பாளராக இருந்த நுபுர் சர்மா தொலைக்காட்சி விவாத நிகழ்ச்சி ஒன்றில் இறைத்தூதர் நபிகள்  நாயகம் குறித்து சர்ச்சைக்க்குரிய கருத்துகளை தெரிவித்திருந்தார். இந்த கருத்தை டெல்லி பாஜக நிர்வாகி நவீன் ஜிந்தால் நியாயப்படுத்த இருவரையும் பதவி நீக்கம் செய்து பாஜக தலைமை நடவடிக்கை எடுத்தது. விஸ்வரூபம் எடுத்த இவ்விவகாரத்தில் அரபு நாடுகள் இந்தியாவுக்கான தூதரை அழைத்து தங்களது கண்டனத்தை பதிவு செய்தன. நுபுர் சர்மாவின் கருத்தை கண்டித்து உத்தரப்பிரதேசம் மாநிலம் கான்பூரில் இஸ்லாமியர்கள் கடையடைப்பு போராட்டம் நடத்தியதில் கலவரம் ஏற்பட்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.






இப்பிரச்சனை தொடர்பாக குவைத்தின் ஃபஹாஹீலில் கடந்த ஜூன் 10 ஆம் தேதி வெள்ளிக்கிழமை தொழுகைக்குப் பின் இந்தியா, பாகிஸ்தான் உட்பட வெளிநாட்டைச் சேர்ந்த இஸ்லாமியர்கள் இந்திய அரசை கண்டித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். ஆனால் குவைத்தில் வெளிநாட்டவர்கள் போராட்டம், ஆர்ப்பாட்டம் நடத்தக்கூடாது என சட்ட விதிகள் உள்ளது. இதை மீறி இந்த போராட்டம் நடந்துள்ளதால் இதில் பங்கேற்ற அனைத்து வெளிநாட்டவரையும் பாரபட்சமின்றி நாடு கடத்த அந்நாட்டு அரசு முடிவெடுத்துள்ளது. 


போராட்டத்தின் போது எடுக்கப்பட்ட வீடியோக்களை கொண்டு அதில் கலந்து கொண்டவர்களை அடையாளம் காணும் பணி நடைபெற்று வருவதாகவும், அவர்களை கைது செய்து நாடு கடத்தப்படுவார்கள் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இவர்கள் அனைவரும் நிரந்தரமாக குவைத்துக்குள் நுழைய தடை விதிக்கப்படுவார்கள். மேலும் குவைத்தில் உள்ள அனைத்து வெளிநாட்டவர்களும் அந்நாட்டு சட்டங்களை மதிக்க வேண்டும் என்றும், எந்த வகையான ஆர்பாட்டங்களிலும் பங்கேற்கக்கூடாது என கூறப்பட்டுள்ளது. இந்த சம்பவத்தால் குவைத்தில் உள்ள வெளிநாட்டவர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர். 


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூட்யூபில் வீடியோக்களை காண