நடிப்புதான் வரம்.. நடிப்புதான் சாபம்.. தற்கொலை செய்துகொண்ட இளம் நடிகை! காரணம் இதுவா?

யூங் சாங்-ஹூன், ஷின் டோங்-யூப் மற்றும் சோய் ஹீ-சியோ ஆகியோருடன் கொரியன் டிராமா தொடரான "பிக் ஃபாரஸ்ட்" இல் யூ முதன்முதலில் அறிமுகமானார்.

Continues below advertisement

தென் கொரிய நடிகை யூ ஜூ யூன் 29 ஆகஸ்ட் 2022 அன்று மரணமடைந்தார். அவருக்கு வயது 27. அவரது மரணத்துக்கு தற்கொலை காரணமாகக் கூறப்படுகிறது. கொரிய மீடியாவான சூம்ப்பி அறிக்கையின்படி யூ ஜூ யூன் தற்கொலைக் கடிதம் ஒன்றையும் எழுதிவைத்து சென்றிருக்கிறார். அதை அவரது மூத்த சகோதரர் தனது இன்ஸ்டாகிராம் கணக்கில் அதைப் பகிர்ந்து கொண்டுள்ளார்.

Continues below advertisement

நடிகர் யூ ஜூ யூன் தனது குறிப்பில் முதலில் தற்கொலை செய்துகொள்வதற்காக தனது குடும்பத்தினரிடம் மன்னிப்பு கேட்டுக் கொண்டுள்ளார்.

அவர் மகிழ்ச்சியான வாழ்க்கை வாழ்ந்ததாகவும், உறுதியானதாகவும் அமைதியாகவும் தான் உணர்ந்ததாகவும் யூ ஜூ யூன் மேலும் எழுதியுள்ளார்.

தான் நடிப்பைத் தவிர வேறு எந்த வேலையையும் செய்ய விரும்பவில்லை என்றும், நடிப்பின் மீதான தனது ஆர்வம் ஒரே நேரத்தில் வரமாகவும் சாபமாகவும் இருந்தது என்றும் நடிகை மேலும் அதில் கூறியுள்ளார்.

கடைசியாகத், தன்னைப் பொக்கிஷமாகக் கருதி நேசித்ததற்காக தன் குடும்பத்தினர், நண்பர்கள் மற்றும் அன்புக்குரியவர்களுக்கும் நன்றி தெரிவித்துள்ளார்.


2018ம் ஆண்டில், யூங் சாங்-ஹூன், ஷின் டோங்-யூப் மற்றும் சோய் ஹீ-சியோ ஆகியோருடன் கொரியன் டிராமா தொடரான "பிக் ஃபாரஸ்ட்" இல் யூ முதன்முதலில் அறிமுகமானார்.

2019ம் ஆண்டு ஜோசன் சர்வைவல் பீரியட் படத்தில் நடித்ததற்காக அவர் மிகவும் பிரபலமானார், அந்தப் படத்தில்  அவர் காங் ஜி-ஹ்வான், கியுங் சூ-ஜின் மற்றும் சாங் வான்-சியோக் ஆகிய முன்னனி நட்சத்திரங்களுடன் நடித்தார். கொரிய திரை உலகில் நடிகர்கள் தொடர்ந்து தற்கொலை செய்துகொள்வது அதிகரித்து வருவது குறிப்பிடத்தக்கது.

Continues below advertisement