கராச்சியில் உள்ள ஸ்விங் உணவகத்தில் (Swing Restaurant) வைக்கப்பட்ட விளம்பரத்தில் ("Aja na Raja - what are you waiting for?") என்று குறிப்பிட்டு ஆலியா பட்(Alia Bhatt ) படத்தை பயன்படுத்தியுள்ளனர்.








உணவக விளம்பரம்:


உணவகத்தில் ஆலியா பட் படத்துடன் கூடிய விளம்பரத்தில் திங்களன்று 25 சதவீதம் தள்ளுபடி என்று குறிப்பிட்டுள்ளது. இது ஆண்களுக்கு மட்டுமே வழங்கப்பட்டுள்ள தள்ளுபடி என்பதால் அந்த விளம்பரத்தில் ஆலியா பட் கை நீட்டி அழைக்கும் விதமான படத்தை பயன்படுத்தியுள்ளனர். அதோடு "Aja na Raja - what are you waiting for?" என்ற வசனமும் இடம்பெற்றுள்ளது. எதற்கு காத்திருக்கிறீர்கள். வாங்க ராஜா என்று விளம்பரத்திற்காக பயன்படுத்தியுள்ளது உணவகம் . 


சமூக ஊடகத்தில் எதிர்ப்பு குரல்: 


மும்பை பாலியல் தொழிலாளியான கங்குபாய் என்ற பெண்ணை மையமாகக் கொண்டு உருவாக்கப்பட்ட படம் கங்குபாய் கத்தியாவாடி. இதில் ஆலியா பட் இதில் பாலியல் தொழிலாளியாக நடித்திருப்பார். இதில் ஆலியா பட் மிகவும் சிறப்பாக நடித்திருப்பார். உண்மை சம்பவத்தின் அடிப்படையில் எடுக்கப்பட்டிருக்கும் படம். பாலியல் தொழிலாளிகளின் இன்னல்களைப் பேசும் படத்தை விளம்பரத்திற்கு பயன்படுத்தியிருப்பது முட்டாள்தனத்தின் வெளிப்பாடு. பாலியல் தொழிலாளியாக நடித்திருக்கும் ஆலியா பட் புகைப்படத்தை விளம்பரத்திற்கு பயன்படுத்தியிருப்பதை சமூக ஊடகங்களில் மிகவும் கடுமையாக எதிர்த்து வருகின்றனர். இது மிகவும் கேவலமான விளம்பர யுக்தி என்றும் கூறிவருகின்றனர்.


ஒருவர், வலி மிகுந்த காட்சியை, பாலியல் தொழிலாளர்களின் வேதனையை தவறாக பயன்படுத்தியிருப்பதன் மூலம் அவர்களின் அறியாமை தெரிகிறது. இதன் மூலம் விளம்பர செய்யலாம் என்ற எண்ணமே தவறானது.


”இதை நீங்கள் ஒரு மார்க்கெட்டிங் யுக்தியாக எண்ணினால், அதன் மூலம் உங்களுக்கு நஷ்டம் தான் ஏற்படும். ஒருவரின் வலியை உங்கள் வியாபாரத்திற்கு பயன்படுத்தியிருப்பது மிகவும் கீழ்மையான ஒன்று. மக்களைப் பற்றி நீங்கள் தவறாக புரிந்துகொண்டுள்ளீர்கள்.” என்று ஒருவர் தன் கருத்தை தெரிவித்துள்ளார்.






ஸ்விங் உணவகம் விளக்கம்:




இதுபற்றி விளக்கம் அளித்துள்ள உணவகம் யார் மனதையிம் காயம்படுத்தும் வகையில் இதை செய்யவில்லை. எப்போதுபோல் உங்களுக்கு தொடர்ந்து சுவையான உணவளிப்போம் என்று தெரிவித்துள்ளது. (Movie kare tou aag, restaurant kare tou paap?')