பிரிட்டிஷ் கொலம்பியாவில் பெற்ற தாயை கொலை செய்து விட்டு பின்னர் ஒட்டவாவுக்கு சென்று கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோவை கொலை செய்ய திட்டமிட்டதாக ரிவர்டெல் என்ற ஓடிடி தொடரில் குழந்தை நட்சத்திரமாக நடித்த ரியான் கிராந்தாம் ஒப்பு கொண்டுள்ளார்.


கடந்த 2020ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம், பார்பாரா வைட்டை கொலை செய்ததற்கு 24 வயதான ரியான் கிராந்தாமுக்கு தண்டனை வழங்குவதற்கு கூடியிருந்த நீதிமன்றத்தில் விசாரணை நடைபெற்றக் கொண்டிருக்கும் போது இந்த தகவல்கள் தெரிய வந்துள்ளது. 


இரண்டாம் டிகிரி கொலை செய்தததாக கிராந்தம் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. அதை ஒப்பு கொண்ட அவர், தனது தாய் பியானோ வாசித்து  கொண்டிருந்தபோது, அவரின் பின்னால் நின்று சுட்டு கொன்றதாக தெரிவித்தார். இந்த சம்பவம் ஸ்குவாமிஷில் உள்ள அவர்களது வீட்டில் அரங்கேறியுள்ளது.


இதையடுத்து, அடுத்த நாள், மூன்று துப்பாக்கிகள், குண்டுகள், 12 கையெறி ஆயுதங்கள், முகாமுக்கு தேவையான பொருள்கள், ஜஸ்டின் ட்ரூடோவின் வீட்டிற்கு செல்ல வழிகாட்டும் வகையில் கூகுள் மேப் என தனது கார் முழுவதும் பொருள்களை நிரப்பி உள்ளார் ரியான் கிராந்தாம். தனது டைரியில் ட்ரூடோவை கொலை செய்வதற்கான நோக்கம் குறித்து கிராந்தம் விரிவாக எழுதியுள்ளார். பின்னர், காவல்துறையினரிடமும் வாக்குமூலம் அளித்துள்ளார்.


கிட்டத்தட்ட 200 கிமீ தொலைவுக்கு காரை ஒட்டு சென்ற அவர், தான் படித்த சைமன் ஃப்ரேசர் பல்கலைக்கழகத்தில் காரை நிறுத்தி கொலை செய்ய வேண்டுமா வேண்டாமா என யோசித்துள்ளார். பின்னர், அவர் மனதில் மாற்றம் ஏற்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து, வான்கூவர் காவல் நிலையத்திற்கு சென்று தனது தாயை கொலை செய்ததை ஒப்பு கொண்டு சரண் அடைந்தார். 


ஒன்பது வயதில் நடிக்கத் தொடங்கிய கிரந்தம், 2019ஆம் ஆண்டு ரிவர்டேலின் என்ற தொடரில் ஒரு எபிசோடில் ஜெஃப்ரி அகஸ்டின் என்ற துணைக் கதாபாத்திரத்தில் நடித்தார். பல மாதங்களாக, அவர் மன அழுத்ததில் இருந்ததாகவும், இதுவே அவர் தாயை கொலை செய்ய காரணமாக அமைந்ததாக நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது. 


சம்பவம் நடைபெற்ற அன்று தனது தாயை எப்படி கொன்றார் என நீதிமன்றத்தில் அவர் முழுவதுமாக வாக்குமூலம் அளித்ததன் மூலம் திடுக்கிடும் தகவல்கள் வெளியாகியுள்ளன.


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூட்யூபில் வீடியோக்களை காண