Kamala Harris : அகதிகள் பற்றிய கேள்விக்கு சிரித்தாரா கமலா ஹாரிஸ்? - நடந்தது என்ன?

தலைநகர் வார்சாவில் போலந்து ஜனாதிபதி ஆண்ட்ரேஜ் டுடாவுடன் ஹாரிஸ் பேசும் போது நடந்த செய்தியாளர் சந்திப்பில் இந்த சம்பவம் நடந்துள்ளது.

Continues below advertisement

உக்ரைன் தொடர்பான கேள்வி ஒன்றுக்கு அமெரிக்கத் துணை அதிபர் கமலா ஹாரிஸ் சிரித்தது அங்கே பெரும் எதிர்ப்பைச் சந்தித்துள்ளது. அமெரிக்க துணை அதிபர் கமலா ஹாரிஸ், உக்ரைன் அகதிகளை அமெரிக்கா தங்கள் நாட்டுக்கு அழைத்துச் செல்லுமா என்று கேட்கப்பட்டதற்கு, சிரித்துப் பேசியதற்காக அவர் கடுமையாக சாடப்பட்டு வருகிறார். சமூக ஊடகங்களில் பலர் அவரது எதிர்வினையை "உணர்ச்சியற்றது" என்று குறிப்பிட்டு வருகின்றனர்.

Continues below advertisement

வார்சாவில் போலந்து ஜனாதிபதி ஆண்ட்ரேஜ் டுடாவுடன் ஹாரிஸ் பேசும் போது நடந்த செய்தியாளர் சந்திப்பில் இந்த சம்பவம் நடந்துள்ளது. "உக்ரேனிய அகதிகளுக்கு அமெரிக்காவில் ஒரு குறிப்பிட்ட ஒதுக்கீடு செய்ய அமெரிக்க அரசு தயாராக உள்ளதா?" என்று ஒரு பத்திரிகையாளர் ஹாரிஸிடம் கேட்கிறார். "மேலும் அதிக எண்ணிக்கையிலான அகதிகளை அமெரிக்கா அழைத்துக்கொள்ள வேண்டும் என நீங்கள் அமெரிக்க அரசிடம் வலியுறுத்தினீர்களா?," என்று போலாந்து அதிபர் டுடாவிடம் அவர்கள் கேட்டனர்.

இந்த கேள்விகளுக்கு பதிலளிக்கும் முன், இரு தலைவர்களும் ஒருவரை ஒருவர் பார்த்து சிரித்து மகிழ்ந்தனர். "A friend in need is a friend indeed,” என்று சத்தமாக சிரித்துக்கொண்டே மேடையில் இருந்த கமலா ஹாரிஸ் கூறினார். சிறிது நேர சிரிப்பலைக்குப் பிறகு அவர்கள் மீண்டும் இயல்புநிலைக்கு வந்து கேள்விக்கு பதிலளித்தனர். அமெரிக்காவில் குடும்பத்துடன் இருக்கும் உக்ரேனிய அகதிகள் அவர்களுடன் தங்குவதற்கு தூதரக செயல்முறையை விரைவுபடுத்த உதவுமாறு ஹாரிஸைக் கேட்டுக் கொண்டதாக டுடா உறுதிப்படுத்தினார்.

அகதிகளின் வரவால் போலந்தின் மீது சுமத்தப்பட்டுள்ள சுமையை கவனத்தில் கொண்டு இந்த விஷயத்தைப் பற்றி விவாதித்ததாக ஹாரிஸ் கூறினார் . ஆனால் அமெரிக்கா ஒரு குறிப்பிட்ட எண்ணிக்கையை எடுத்துக்கொள்வதில் உறுதியாக உள்ளதா என்பது பற்றி அவர் பதிலளிக்கவில்லை.

ஆனால் அவர்களின் பதிலை விட, அவர்களின் சிரிப்புதான் குடியரசுக் கட்சியினர் உட்பட அனைவரின் கவனத்தையும் ஈர்த்தது. ட்விட்டர் உபயோகிப்பவர்கள் பலர் இதை "வெட்கக்கேடானது" என்று குறிப்பிட்டாலும், மற்றவர்கள் இரு தலைவர்களும் அகதிகளைப் பற்றிச் சிரிக்கவில்லை என்று கூறி அவர்களைப் பாதுகாத்து வருகின்றனர்..

Continues below advertisement
Sponsored Links by Taboola