காபூல் விமான நிலையத்தில் நடந்த தாக்குதல் சம்பத்தில் 13 அமெரிக்க வீரர்கள் உட்பட 200 பேர் உயிரிழந்ததாக கூறப்படுகிறது.


ஆப்கானிஸ்தானில் தலிபான் அமைப்பினர் நாட்டைக் கைப்பற்றிய பின்னர், மேற்கத்திய நாடுகள் தங்களது குடிமக்களை தாயகத்துக்கு அழைத்து வரும் பணியை முடிக்கி விட்டிருந்தன.


முன்னதாக, ஆப்கானிஸ்தான் நாட்டில் நிலவும் பாதுகாப்பு சூழல்களை கருத்தில்கொண்டு, வரும் 31-ஆம் தேதியுடன் ஆப்கானிஸ்தானில் உள்ள அமெரிக்கப் படைகளை முழுவதுமாக விலக்கிக்கொள்வது என்ற முடிவில் அமெரிக்கா உறுதியாக உள்ளதாக ஜோ பைடன் அரசு கூறியது. கடந்த ஆகஸ்ட் 14ம் தேதி முதல் இதுநாள் வரையில் 5,000க்கும் மேற்பட்ட அமெரிக்க வீரர்கள் காபூல் விமான நிலையத்தில் இருந்து அமெரிக்காவுக்கு அழைத்து வரப்பட்டுள்ளனர். 



இந்நிலையில், நேற்று முன்தினம் (ஆகஸ்ட் 26ம் தேதி ) காபூல் விமான நிலைய வளாகத்தில் ஐ.எஸ். ஐ.எஸ் கொரோசான் என்ற அமைப்பு வெடிகுண்டுத் தாக்குதல் நடைத்தியது. இரண்டு இடங்களில் தனித்தனியாக தாக்குத நடைபெற்றதாக தெரிவித்த பெண்டகன், கடந்த வெள்ளிக்கிழமை ஒரு இடத்தில் குண்டு வெடிப்பு நடைபெற்றதாக தெரிவித்தது. உலகளவில், குண்டு வெடிப்பு சம்பவங்கள் தொடர்பாக தெளிவான தகவல்கள் இல்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.             


இதற்கிடையே, ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூல் விமான நிலைய குண்டுவெடிப்புக்குக் காரணமான ஐ எஸ் ஐ எஸ் கே .இயக்க தீவிரவாத அமைப்பின் மீது அமெரிக்கா பதில்  தாக்குதலை தொடுத்தது. மேலும், இந்த தாக்குதல் சம்பவம் தொடர்பாக தீவிரவாதி  கொல்லப்பட்டு விட்டதாக அமெரிக்க பாதுகாப்புத்துறை அறிவித்துள்ளது.அந்நாட்டின் நங்கர்கார் மாகாணத்தில் ட்ரோன் மூலம் நடத்தப்பட்ட தாக்குதலில் அந்த தீவிரவாதி கொல்லப்பட்.டதாக அஅமெரிக்க படைகளின் கேப்டன் பில் அர்பன் கூறினார். 


ஐ எஸ் ஐ எஸ் கே அமைப்பில் இந்தியர்கள்: 


காபூல் விமான நிலையத்தில் தாக்குதல் நடத்திய ஐ எஸ்.ஐ.எஸ்.கே அமைப்பில் கேரளாவைச் சேர்ந்த 14 இந்தியர்கள் உள்ளதாக கூறப்படுகிறது. அதிகாரப்பூர்வமாக தகவல் எதுவும் வெளியாகத நிலையில் தற்போதைய தாக்குதலில் இவர்கள் நேரடியாக ஈடுபட்டார்களா என்பது தெளிவாக தெரியவில்லை. இருப்பினும், கடந்த ஆகஸ்ட் 26ம் தேதி துர்க்மெனிஸ்தான் தூதரகத்துக்கு முன்பு திட்டமிடப்பட்ட தாக்குதல் முறியடிக்கப்பட்டது. இது தொடர்பாக, இரண்டு பாகிஸ்தானியர்களை ஆப்கானிஸ்தான் அரசு கைது செய்துள்ளது. 


கடந்த ஆகஸ்ட் மாதம் 15ம் தேதி, பர்கான் மாகாணத்தில் உள்ள மிகப்பெரிய சிறைச்சாலையை (பக்ராம் சிறைச்சாலை) கைப்பற்றிய தலிபான் அமைப்பினர், சிறைக்கைதிகளை விடுதலை செய்தனர். அப்போது, சிறையில் இருந்து கேரளாவைச் சேர்ந்த 14 இந்தியர்கள் தப்பித்ததாக ஹிந்துஸ்தான் டைம்ஸ் நாளிதழ் தெரிவித்தது குறிப்பிடத்தக்கது. 


மேலும், வாசிக்க:


Kabul Airport Blast: காபூல் குண்டுவெடிப்புக்கு காரணமான ISIS கொரசான் அமைப்பு.. யார் இவர்கள்?