கேரளாவின் பத்தனம்திட்டா மாவட்டம், திருவல்லா என்ற இடத்தை சேர்ந்தவர் ஜூலி ஏ.மாத்யூ. இவர் கணவர் மற்றும் இரு பெண் குழந்தைகளுடன் அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தில் வசித்து வருகிறார். பள்ளி பருவத்திலேயே அமெரிக்கா சென்றார்.  அவரது தந்தை ஒரு தொழிலதிபராக இருந்தார்.  அவரது தந்தைக்கு சட்ட ரீதியான பிரச்னை ஏற்பட்டது. இதனால் தொடர்ந்து சட்டம் பயில ஜூலி முடிவு செய்தார். பிலடெல்பியா மாகாணத்தில் வளர்ந்த அவர், பென் மாகாண பல்கலைக்கழகத்திலும், டெலவாரே சட்ட கல்லூரியிலும் படித்து வழக்கறிஞரானார்.


சட்டப்படிப்பு முடித்த பின் டெக்சாஸ் நீதிமன்றத்தில் 15 ஆண்டுகளாக வழக்கறிஞராக பணியாற்றினார்.  இந்நிலையில், நான்கு ஆண்டுகளுக்கு முன், போர்ட் பெண்ட் மாவட்ட நீதிமன்ற நீதிபதியாக ஜூலி ஏ.மாத்யூ தேர்வானார். நீதிபதி பதவிக்கு தேர்வான முதல் இந்திய வம்சாவளியைச் சேர்ந்தவர் என்ற பெருமையை ஜூலி பெற்றார்.


 இந்நிலையில் இரண்டாவது முறையாக மீண்டும் நீதிபதியாக தேர்வு செய்யப்பட்டுள்ளார். கேரளா வந்துள்ள நீதிபதி ஜூலி ஏ.மாத்யூ, காசர்கோடில் உள்ள கணவரின் பூர்வீக வீட்டில், நேற்று வீடியோ கான் பரன்ஸ்' வாயிலாக பதவி ஏற்றுக் கொண்டார். இதன் மூலம் அங்கு நான்கு ஆண்டுகள் நீதிபதியாக பதவி வகிப்பார்.






பதவியேற்றபின் பின், ஜூலி ஏ.மாத்யூ கூறியதாவது, ” மீண்டும் நீதிபதியாக பதவியேற்றதை பெருமையாக உணர்கிறேன். இந்த முறை என் கணவர் வீட்டிலிருந்து பதவியேற்க வேண்டும் என்றை விரும்பினேன். இல்லையெனில் எனது மாமியார் மற்றும் குடும்பத்தினர் விழாவில் பங்கேற்க முடியாத நிலை இருந்திருக்கும். இந்த பதவிறேப் விழாவில் என் கணவரின் குடும்பத்தார் பங்கேற்றது மிகவும் மகிழ்ச்சியை தருகிறது” என்றார். மேலும்,  இதுதான் எனது சிறந்த வேலை. இந்த வேலையை நான் மிகவும் நேசிக்கிறேன்.  என் கணவர், பெற்றோர் எனக்கு பெரும் ஆதரவு அளித்து என் வாழ்க்கையில் உறுதுணையாக உடனிருந்தனர் என்று ஜூலி ஏ.மாத்யூ. கூறியுள்ளார். 


அமெரிக்காவில் சமீப காலமாக இந்தியர்கள் நீதிபதி பதவிகளில் அமர்ந்து அசத்தி வருகின்றனர். அதன்படி முன்னதாக,  ஃபோர்ட் பெண்ட் கவுண்டியில் பதவி வகித்த முதல் இந்திய அமெரிக்கரான ஜார்ஜ், நவம்பர் மாதம் நடைபெற்ற தேர்லில் கவுன்டியின் நீதிபதியாக இரண்டாவது முறையாக வெற்றி பெற்றார். இவர் கேரளாவின் காக்கோடு நகரை சேர்ந்தவர். 57 வயதான ஜனநாயகக் கட்சியைச் சேர்ந்த ஜார்ஜ் இவர் 2018ல் வெற்றி பெற்றறார்.