மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள ரெட்மி நிறுவனத்தின் புதிய ரெட்மி நோட் 10டி 5ஜி ஸ்மார்ட்போன் மாடலை இந்தியாவில் தற்போது அறிமுகம் செய்துள்ளது அந்நிறுவனம். இது வருகிற 26 ஆம் தேதி ‘ பிரைம் டே’ அன்று அமேசானில் வெளியாக உள்ளது. இது ரெட்மி நோட் சீரிஸ் வரிசையில் (இது ரெட்மி நோட் 10, ரெட்மி நோட் 10 ப்ரோ, ரெட்மி நோட் 10 ப்ரோ மேக்ஸ் மற்றும் ரெட்மி நோட் 10 எஸ் ) அறிமுகமாகியுள்ள ஐந்தாவது மொபைல் மாடலாகும். ஆனால் சியோமி மற்றும் ரெட்மி நிறுவனத்தின் கூட்டு படைப்பில் உருவாகியிருக்கும் முதல் 5ஜி மொபைல் ரெட்மி நோட் 10டி 5ஜி என்பதும் குறிப்பிடத்தக்கது. கடந்த சில வாரங்களாகவே இந்த மொபைல்போன் குறித்த வதந்திகள் சமூக வலைத்தளங்களில் பேசப்பட்டு வந்தன. இந்நிலையில் பட்ஜெட் விலையில் இந்த மொபைல்போன் வெளியாகியுள்ளது. இரண்டு வித வேரியண்டில் வெளியாகியுள்ள இந்த மொபைல்போனின் சிறப்பம்சங்களை கீழே காணலாம்.
4 ஜிபி ரேம் மற்றும் 64 ஜிபி மெமரி கொண்ட ரெட்மி நோட் 10டி 5ஜி ஸ்மார்ட்போனின் விலை ரூ.13,999-ஆக உள்ளது. அதேபோல 6 ஜிபி ரேம் மற்றும் 128 ஜிபி மெமரி கொண்ட ரெட்மி நோட் 10டி 5ஜி மாடலின் விலை ரூ.15,999-ஆக உள்ளது. குரோமியம் ஒயிட், கிராஃபைட் பிளாக், மெட்டாலிக் ப்ளூ மற்றும் மிண்ட் கிரீன் உள்ளிட்ட பிரத்யேக நிறத்தில் களமிறங்கியுள்ளது. ரெட்மி நோட் 10டி 5ஜி ஸ்மார்ட்போன் மாடல் 6.5-இன்ச் எல்சிடி டிஸ்பிளே வசதியுடன் உருவாக்கப்பட்டுள்ளது. மேலும் 2400 x 1080 பிக்சல் குவாலிட்டி, கொரில்லா கிளாஸ் பாதுகாப்பு உள்ளிட்ட பல்வேறு அம்சங்களையும் கொண்டுள்ளது. கேமராவை பொறுத்தவரை ட்ரிபிள் ரியர் அமைப்பு கொண்ட பின்பக்க கேமரா மற்றும் 8 மெகாபிக்சல் செல்பீ கேமரா வசதியுடன் வருகிறது. 18W அதிவிரைவு சார்ஜிங் வசதி கொண்ட 22.5W சார்ஜரும் கிடைக்கிறது. பேட்டரியை பொறுத்தவரை 5,000 எம்ஏஎச் பேட்டரி பொறுத்தப்பட்டுள்ளது. ’ ரெட்மி நோட் 10டி 5ஜி’ மொபைல்போனின் மொத்த எடை 180 கிராமாகும்.
அமேசான் பிரைம் டேயில் இந்த புதிய மொபைல் அறிமுகமாக உள்ளது. அமேசான் தனது வலைத்தளத்தில் முன்பே குறிப்பிட்டது போல , பிரைம் பயனாளர்களுக்கு எச்.டி.எஃப்.சி வங்கி கிரெடிட் கார்டுகளை பயன்படுத்தினால் 10 சதவிகிதம் சலுகைகள் கிடைக்கிறது. இதே போல ஈஸி இ.எம்.ஐ வசதிகளை பயன்படுத்தி ’ ரெட்மி நோட் 10டி 5ஜி' ஸ்மார்ட்போனை வாங்குபவர்களுக்கு விலையில் இருந்து 1000 ரூபாய் தள்ளுபடியும் கிடைக்கிறது.மொத்தத்தில் பட்ஜெட் விலையில் பல சிறப்பம்சங்களை கொண்ட 5ஜி மொபைலாக ’ ரெட்மி நோட் 10டி 5ஜி’ இருக்கும் என நம்பப்படுகிறது.