12 வருடங்களாக ஒரு நாளைக்கு 30 நிமிடங்கள் மட்டுமே தூங்குகிறார் ஒரு ஜப்பானிய மனிதர். இச்சம்பவம் அனைவரது மத்தியிலும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. 


ஒரு மனிதனுக்கு ஆரோக்கியமாக வாழ குறைந்தது 6 மணிநேரத்திலிருந்து 8 மணி நேர தூக்கம் மிகவும் அவசியம் என மருத்துவ வல்லுநர்கள் தெரிவிக்கின்றனர். அவ்வாறு தேவையான தூக்கத்தை நாம் தர மறுத்தால் மனதளவிலும் சரி, உடலளவிலும் சரி கடுமையான தாக்கத்தை மனிதன் சந்திப்பான் என்பதில் மாற்றுக்கருத்து இல்லை. 


ஆனால் ஒரு மனிதர் 12 வருடங்களாக வெறும் 30 நிமிடங்கள் மட்டுமே ஒரு நாளை தூங்குகிறார் என சொன்னால் நம்ப முடிகிறதா? ஆனால் இது உண்மை. ஆம். ஜப்பானை சேர்ந்த டைசுக் கோரி என்பவர் ஒரு நாளைக்கு வெறும் 30 நிமிடங்கள் மட்டும்தான் உறங்குகிறாராம். இதை கடந்த 12 வருடங்களாக கடைபிடித்து வருகிறாராம். 


மேற்கு ஜப்பானில் உள்ள ஹியோகோ மாகாணத்தைச் சேர்ந்த 40 வயதான அவர், தனது உடலையும் மூளையையும் குறைந்த தூக்கத்துடன் சாதாரணமாகச் செயல்பட பயிற்சியளித்ததாகக் தெரிவிக்கிறார். மேலும் இந்த நடைமுறை தனது வேலை திறனை கணிசமாக மேம்படுத்தியதாக அவர் கூறுகிறார்.


இதுகுறித்து கோரி கூறுகையில், "உணவுக்கு ஒரு மணி நேரத்திற்கு முன்பு நீங்கள் உடற்பயிற்சி அல்லது காபி குடித்தால், நீங்கள் தூக்கத்தைத் தடுக்கலாம்” எனத் தெரிவிக்கிறார். 


ஹோரி சொல்வது உண்மையா என ஆராய ஜப்பானின் யோமியுரி டிவி, will you go with me என்ற ரியாலிட்டி ஷோவில் அவரை மூன்று நாட்கள் கண்காணித்தது. அப்போது ஹோரி வெறும் 26 நிமிடங்கள் மட்டுமே தூங்கினார். மேலும் எழும்பும்போது மிகவும் உற்சாகமாக எழுந்தார். காலை உணவு சாப்பிட்டார். வேலைக்கு சென்றார். இதனிடையே ஜிம்மிற்கும் செல்லுகிறார். 


இதுமட்டுமல்லாமல் கடந்த 2016ஆம் ஆண்டு ஜப்பான் ஷார்ட் ஸ்லீப்பர்ஸ் பயிற்சி சங்கத்தை நிறுவினார். அங்கு அவர் தூக்கம் மற்றும் ஆரோக்கியம் குறித்த வகுப்புகளை கற்பிக்கிறார். இன்றுவரை, அவர் 2,100 க்கும் மேற்பட்ட மாணவர்களுக்கு அல்ட்ரா ஷார்ட் ஸ்லீப்பர்களாக மாற பயிற்சி அளித்துள்ளார்.


முன்னதாக தாய் என்கோக் என்ற 80 வயதான வியட்நாமிய மனிதர் 60 ஆண்டுகளுக்கும் மேலாக தூங்கவில்லை என்று கூறுகிறார். 1962 இல் காய்ச்சல் ஏற்பட்ட பிறகு, அவர் தூங்கும் திறனை இழந்ததாக கூறுகிறார்.