கிழக்கு ஜப்பானில் ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 7.3 ஆக பதிவாகியுள்ளது. இந்த நிலநடுக்கமானது புகுஷிமா கடற்கரையில் ஏற்பட்டதாக தெரிவிக்கப்பட்டிருக்கிறது. இந்த நிலநடுக்கமானது கடலின் மேற்பரப்பில் இருந்து 60 கிமீ ஆழத்தில் ஏற்பட்டதாக ஜப்பான் வானிலை ஆய்வு மையம் தெரிவித்து இருக்கிறது. 


 






அதே போல, ஜப்பான் டோக்யோ அருகே கடற்பகுதியில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 7.1 ஆக பதிவாகியுள்ளது. இந்த நிலநடுக்கமானது டோக்கியோவின் வடகிழக்கே 297 கிமீ தொலைவில் ஏற்பட்டுள்ளதாக தேசிய நில அதிர்வு மையம் தெரிவித்திருக்கிறது


 






அடுத்தடுத்து 2 முறை நிலநடுக்கம் ஏற்பட்டதால் கட்டடங்கள், குடியிருப்புகள் குலுக்கியதால் மக்கள் அச்சமடைந்துள்ளனர். இந்த நிலநடுக்கத்தினால் 20 லட்சம் மக்களின் வீடுகள் மின்சாரத்தேவையை இழந்துள்ளதாக டோக்கியோ மின்சாரம் நிறுவனம் கூறியுள்ளது. 


 






கடந்த 11 ஆண்டுகளுக்கு இந்தப்பகுதியில் 9.0 ரிக்டர் அளவிற்கு நிலநடுக்கம் பதிவாகி, சுனாமி பேரழிவும் ஏற்பட்டிருந்தது. இந்தப்பாதிப்பால் அங்கு இருந்த அணு உலையும் பாதிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடியூடிபில் வீடியோக்களை காண