அமெரிக்க அதிபர் ஜோ பைடன் கடந்த திங்கள்கிழமை வெள்ளை மாளிகையில் நடந்த நிகழ்ச்சியில் செய்தியாளர் ஒருவரை தகாத வார்த்தையில் திட்டிய வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.


வெள்ளை மாளிகையில் நிகழ்ச்சி முடிந்து பத்திரிகையாளர்கள் அறையை விட்டு வெளியேறும்போது, ஃபாக்ஸ் நியூஸ் செய்தியாளர் ஒருவர் பணவீக்கம் என்பது ஒரு அரசியல் பொறுப்பு என்று நீங்கள் நினைக்கிறீர்களா? என்று அமெரிக்க அதிபர் ஜோ பைடனிடம் கேள்வி எழுப்பினார்.


அப்பொழுது மைக் ஆனில் இருப்பதை அறியாத ஜோ பைடன், "இது ஒரு பெரிய சொத்து. மேலும் பணவீக்கம் என்று தெரிவித்து அதன் பின்னர்,"என்ன ஒரு “B**" மகன்," என்று முணுமுணுத்தார். அந்த நேரத்தில் அறையில் இருந்த அந்த செய்தியாளர், அந்த அறையில் இருந்த சத்தத்தில் பைடன் உண்மையில் என்ன சொன்னார் என்பதை கேட்க முடியவில்லை என்று தெரிவித்தார். 






ஜோ பைடன் கவுன்சில் கூட்டத்தில் கலந்துகொண்டபோது இந்த சம்பவம் அரங்கேறியுள்ளது. இந்த நிகழ்ச்சியில் அதிக விலையை சமாளிக்க நுகர்வோருக்கு உதவும் வகையில் விதிமுறைகளை மாற்றுவது மற்றும் சட்டங்களை அமல்படுத்துவது குறித்து விவாதிக்கப்பட்டது. 


இதையடுத்து, செய்தியாளரை தகாத வார்த்தையில் அமெரிக்க அதிபர் ஜோ பைடன் திட்டியது இணையத்தில் வைரலானதை தொடர்ந்து பலரும் சமூக வலைதளங்களில் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். பல்வேறு தரப்பில் இருந்து இதுகுறித்து கேள்வியும் எழுப்பப்பட்டு வருகிறது. 


இதேபோல், கடந்த ஜூன் 2021 ல், பைடன் மற்றும் ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடினுடனான சந்திப்பைப் பற்றி சிஎன்என் நிருபர் கேள்வி எழுப்பியபோது, "நீங்கள் அதை புரிந்து கொள்ளவில்லை என்றால், நீங்கள் தவறான வியாபாரத்தில் இருக்கிறீர்கள். இது ஒரு முட்டாள் தனமான கேள்வி என்று நிருபரை ஜோ பைடன் திட்டினார். அந்த செய்தியும் வைரலானதை தொடர்ந்து பாதிக்கப்பட்ட நிருபரிடம் ஜோ பைடன் மனிப்பு கேட்டார் என்பது குறிப்பிடத்தக்கது. 


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடிபில் வீடியோக்களை காண