Russia - Ukraine War: உக்ரைன் அணை மீது தாக்குதல் நடத்திய ரஷ்யா: வெள்ள அபாய எச்சரிக்கை! அச்சத்தில் மக்கள்!

உக்ரைன் கட்டுப்பாட்டில் உள்ள காக்கோவ்க  அணை மீது ரஷ்யா தாக்குதல் நடத்தியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Continues below advertisement

 உக்ரைன் கட்டுப்பாட்டில் உள்ள காக்கோவ்க  அணை மீது ரஷ்யா தாக்குதல் நடத்தியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Continues below advertisement

கடந்த 2022ஆம் ஆண்டு, பிப்ரவரி மாதம் 24ஆம் தேதி, உக்ரைன் மீது ரஷ்யா படையெடுத்த நிலையில், கிட்டத்தட்ட 15 மாதங்களாக போர் தொடர்ந்து வருகிறது. ஆரம்பத்தில் போரில் உக்ரைன் சற்று பின் தங்கியிருந்தாலும் அமெரிக்கா மற்றும் இதர நாடுகளின் உதவியுடன் தற்போது வரை தாக்குப்பிடித்து வருகிறது. பெரும்பாலான நகரங்களில் இருந்து ரஷியா, தங்களின் படைகளை திரும்பப்பெற்றது. சமீப காலமாகவே, போரில் ரஷியா பின்னடைவுகளை சந்தித்து வந்த நிலையில், கடந்தாண்டு அக்டோபர் மாதம் முதல் அந்நாடு மீண்டும் தாக்குதல் நடத்த தொடங்கியது.

சமீபத்தில் உக்ரைன் நாட்டிற்கு 2.5 பில்லியன் டாலரை அமெரிக்கா வழங்கியது. மேலும் 31 போர் பீரங்கிகளை வழங்கவும் உறுதியளித்துள்ளது. ஓராண்டுக்கும் மேலாக இந்த போர் நடைபெற்று வரும் சர்வதேச அளவில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.

இது போன்ற சூழலில் செர்சன் நகருக்கு அருகே உக்ரைன் கட்டுப்பாட்டில் உள்ள காக்கோவ்க  அணை மீது ரஷ்யா தாக்குதல் நடத்தியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அணை மீது தாக்குதல் நடத்தப்படுள்ளதால் ஆயிரக்கணக்கான மக்கள் வெள்ளத்தால் பாதிக்கப்படும் அபாயம் உள்ளதாக கூறப்பட்டுள்ளது. அணையில் ஏற்பட்டுள்ள பாதிப்பால் 18 மில்லியன் கன அடி நீர் வெளியேறுவதாகவும், இதனால கரையோரம் இருக்கும் ஆயிரக்கணக்கான மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாகவும்  உக்ரைன் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து உக்ரைன் உள்துறை அமைச்சகம்,ஆற்றின் வலது கரையில் உள்ள 10 கிராமங்கள் மற்றும் நகரங்களில் வசிப்பவர்களை வெளியேற அறிவுறுத்தியுள்ளது.

மேலும் ரஷ்யா ஆக்கிரமிப்பு பகுதியான ஜபோரில்லால்யா அருகே அணுமின் நிலையம் செயல்பட்டு வருகிறது. இதற்கு காக்கோவ்க நீர்தேக்கதிலிருந்துதான் குளிரூட்டுவதற்கு தேவையான நீர் வழங்கப்படுகிறது. நீர் வழங்கப்படுவதில் பாதிப்பு ஏற்பட்டால் அணுமின் நிலையம் பாதிக்கப்படும் என கூறப்படும் நிலையில், சர்வதேச அணு சக்தி கூட்டமைப்பு தரப்பில் அணை மீது தாக்குதல் ஏற்பட்டுள்ளதால் அணுமின் நிலையத்திற்கு எந்த பாதிப்பும் இல்லை என தெரிவித்துள்ளது. இதனை தொடர்ந்து அதிபர் ஜெலன்ஸ்கி உக்ரைன் நாட்டின் பாதுகாப்பு கவுன்சிலின் அவசர கூட்டத்தை கூட்டியுள்ளார். அணையில் இருந்து வெளியேறும் நீர் அளவு அடுத்த 5 மணி நேரத்தில் அபாய கட்டம் எட்டும் என கெர்சன் பகுதி ராணுவத் தலைவர் கூறியுள்ளார். 

Continues below advertisement