இஸ்ரேல் நாட்டில் கடந்த 3 நாட்களுக்கு மேலாக ஹமாஸ் அமைப்பினர் தாக்குதல் நடத்தி வருவது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த நிலையில், 25 வயதான நோவா அர்காமணி என்ற இளம்பெண், அவருடைய காதலர் அவி நாதனுடன் இசை திருவிழாவில் கலந்து கொள்ள சென்றுள்ளார். அப்போது, அவர்களை ஹமாஸ் அமைப்பினர் பிடித்து, தாக்கியுள்ளனர். 


தொடர்ந்து, அர்காமணி என்ற பெண்ணை ஹமாஸ் அமைப்பினர் கொண்டு வந்த பைக்கில் கட்டாயப்படுத்தி அமர வைத்து கடத்தி சென்றுள்ளனர். அப்போது அந்த பெண், “ப்ளீஸ் என்னை கொன்னுடாதீங்க” என்று அந்த அமைப்பினரிடம் கெஞ்சிய வீடியோ பார்ப்போர் மனதை கரைக்கிறது. 






இஸ்ரேலில் அமைதி வேண்டி காசா மற்றும் இஸ்ரேல் எல்லையில் உள்ள கிராமம் ஒன்றில் கடந்த சனிக்கிழமை நோவா திருவிழா நடந்துள்ளது. இதில், ஜெர்மனி நாட்டை சேர்ந்த இளம்பெண் ஒருவர் தனது தோழியுடன் கலந்து கொண்டுள்ளார். 


அங்கு, அமைதி வேண்டி கலந்து கொண்ட மக்கள் ஆடி, பாடி, குடித்து அமைதி வேண்டும் என கோஷம் எழுப்பியுள்ளனர். அப்போது அங்கு வந்த ஹமாஸ் அமைப்பினர் யாரும் எதிர்பார்க்காத வேலையில் தாக்குதல் நடத்த தொடங்கினர். இதுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் இஸ்ரேலும் பதிலுக்கு தாக்குதல் நடத்தியது. இதனால், அமைதி வேண்டி நடந்த கூட்டம் அமைதியின்றி தெறித்து ஓடியது. இதில், 600 க்கு மேற்பட்டோர் உயிரிழந்துள்ளதாக கூறப்படுகிறது. 


இந்த சூழலில், அந்த தாக்குதலில் உயிரிழந்த பெண்ணின் உடலை அரை நிர்வாணப்படுத்தி, ஹமாஸ் போராளிகள் தங்களது திறந்த ட்ரக்கில் நகரம் முழுவதும் எடுத்து சென்றுள்ளனர். இந்த காட்சிகள் இணையத்தில் வைரலாகிய நிலையில் பலரும் இதற்கு கண்டனம் தெரிவித்து வருகின்றனர். இஸ்ரேல் மீது தாக்குதல் நடத்திய அமைப்பினர் பொதுமக்களை கொன்று பிணைக் கைதிகளாக பிடித்து வருவதாக கூறப்படுகிறது. அமைப்பினர் தாக்குதலில் உயிரிழந்த அப்பாவி பொதுமக்களின் உடல்களை திறந்த லாரிகளில் ஏற்றி ஊர்வலம் சென்ற வீடியோக்களும் இணையத்தில் பரவி அதிர்ச்சியை அளிக்கிறது. 






ஹமாஸ் போராளிகள் ஒரு பெண்ணின் சடலத்தை எடுத்துக்கொண்டு நகரத்தில் ஊர்வலம் சென்றுள்ளனர். அப்போது, பாலஸ்தீன பொதுமக்கள் அந்த பெண்ணின் உடலை தாக்கியதாகவும், பாலஸ்தீன பொதுமக்கள் அந்த பெண்ணின் உடலை வீடியோவில் காணலாம். ஏவுகணைத் தாக்குதல்களுக்குப் பிறகு பாலஸ்தீனியர்கள் தெற்கு இஸ்ரேலுக்குள் ஊடுருவியதையும், திறந்த லாரிகளில் தெருக்களில் சுற்றித் திரிவதையும் பார்க்கக்கூடிய பல பயங்கரமான காட்சிகள் இஸ்ரேலில் இருந்து வந்துள்ளன. அவர்கள் வழியில் வரும் எந்த இஸ்ரேல் குடிமகனையும் கொன்று குவித்து வருவதாகவும் செய்திகள் பரவி வருகிறது. 


சுமார் 35 இஸ்ரேலிய வீரர்கள் சிறைபிடிக்கப்பட்டு பணயக் கைதிகளாக பிடித்து வைக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. பல வருடங்களில் இஸ்ரேல் மீது ஹமாஸ் நடத்திய மிகப் பெரிய தாக்குதல் இது என்று கூறப்படுகிறது. இந்த தாக்குதலில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை இதுவரை தெரியவில்லை. எவ்வாறாயினும், தாக்குதலின் அளவைப் பார்க்கும்போது, ​​இதுவரை ஆயிரக்கணக்கான மக்கள் இந்தத் தாக்குதலில் உயிரிழந்துள்ளதாக கணக்கிடப்பட்டுள்ளது. 






ஏவப்பட்ட 5000 ஏவுகணைகள்:


கடந்த சனிக்கிழமை காலை காசா பகுதியில் இருந்து இஸ்ரேல் மீது சுமார் 5,000 ராக்கெட்டுகள் வீசப்பட்டன.இந்த எதிர்பாராத தாக்குதலில் ஒரு பெண் உயிரிழந்தார். ஏவுகணை தாக்குதலின் மறைவில் ஹமாஸ் அமைப்பினர் இஸ்ரேல் எல்லைக்குள் ஊடுருவி துப்பாக்கியால் தாக்குதல் நடத்தியுள்ளனர். பின்னர், இந்த தாக்குதலுக்கு ஹமாஸ் அமைப்பு பொறுப்பேற்றது.