Israel PM: சர்வதேச நாடுகளின் கடும் விமர்சனங்களுக்குப் பிறகு, இஸ்ரேல் பிரதமர் தங்களது தவறை ஒப்புக்கொண்டுள்ளார்.


மிகப்பெரிய தவறு - நெதன்யாகு:


ராஃபா நகரில் இருந்த பாதுகாப்பு கூடாரங்களின் மீது, இஸ்ரேல் ராணுவம் நடத்திய தாக்குதலில், பாலஸ்தீனியர்கள் சுமார் 45 பேர் உயிரிழந்தனர். அதில் 12 பெண்கள் மற்றும் 8 ஆகியோரும் அடங்குவர். பொதுமக்கள் கொல்லப்பட்ட இந்த கோர சம்பவத்திற்கு, சர்வதேச நாடுகள் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றன. இஸ்ரேலின் நட்பு நாடான அமெரிக்கா கூட இந்த தாக்குதலுக்கு கண்டனம் தெரிவித்துள்ளது. இந்நிலையில் தான் பொதுமக்கள் தங்கியிருந்த முகாகள் மீது நடத்தப்பட்ட தாக்குதல் மிகப்பெரிய தவறு என, இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு தெரிவித்துள்ளார்.


ராணுவ விசாரணை - நெதன்யாகு:


இஸ்ரேல் நாடாளுமன்றத்தில் பேசிய நெதன்யாகு, “அப்பாவி பொதுமக்களுக்கு தீங்கு விளைவிக்காமல் இருக்க எங்களின் அதிகபட்ச முயற்சிகள் இருந்தபோதிலும், நேற்றிரவு, ஒரு சோகமான தவறு ஏற்பட்டது. நாங்கள் சம்பவம் தொடர்பாக விசாரித்து வருகிறோம், ஹமாஸ் படையினரை ஒழிப்பது எங்கள் கொள்கை என்பதால் அதில் ஒரு முடிவைப் பெறுவோம்" என தெரிவித்துள்ளார். அதோடு, ஹமாஸ் தலைவர்கள் தொடர்பாக உளவுத்துறை அளித்த பிரத்யேக தகவல் அடிப்படையிலேயே இந்த துல்லியமான வான்வழ்த்ஜ் தாக்குதல் நடத்தப்பட்டதாகவும், அதில் ஹமாஸ் பிரிவின் இரண்டு முக்கிய தலைவர்கள் கொல்லப்பட்டதாகவும் இஸ்ரேல் ராணுவம் தெரிவித்துள்ளது.


36 ஆயிரம் பேர் பலி:


ஹமாஸ் படையினர் நடத்திய தாக்குதலுக்கு தெற்கு இஸ்ரேலில் பொதுமக்கள் சுமார் ஆயிரம் பேர் உயிரிழந்தான்ர். அதற்கு பதிலடி தரும் வகையில், இஸ்ரேல் போரை நடத்தி வருகிறது. கடந்த சில மாதங்களாக தொடரும் இந்த போரில், தற்போது வர 36 ஆயிரம் பாலஸ்தீனியர்கள் கொல்லப்பட்டுள்ளனர்.  அதில் பெரும்பாலும் பொதுமக்கள் தான் எனவும் தரவுகள் தெரிவிக்கின்றன. இந்நிலையில் ராஃபா நகரில் புலம்பெயர்ந்த பாலஸ்தீனியர்கள் மீதான தாக்குதலுக்கு ஹமாஸ் அமைப்பு கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. அதேநேரம், ரஃபாவில் ஹமாஸின் கடைசி எஞ்சியுள்ள பட்டாலியன்களை இஸ்ரேல் அழிக்க வேண்டும் என்று நெதன்யாகு பேசியுள்ளார். அங்குதான் காஸாவில் இருந்து புலம்பெயர்ந்த பல்லாயிரக்கணக்கான் பொதுமக்கள் தஞ்சமடைந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.


போர் நிறுத்தம் வருமா?


ராஃபா நகரில் தாக்குதல்கள் நிறுத்தப்பட வேண்டும் என ஏற்கனவே ஐக்கிய நாடுகள் சபை அறிவுறுத்தியுள்ளது.  அதோடு,  இஸ்ரேல் போர் விதிகளை மீறி, மனித குலத்திற்கு எதிரான செயல்களில் ஈடுபட்டு வருவதாக, சர்வதேச குற்றவியல் நிதிமன்றத்தில் புகார் எழுந்துள்ளது.  ஆனால், தாங்கள் போர் விதிகளின்படியே செயல்படுவதாக இஸ்ரேல் பேசி வந்தது. இந்நிலையில் தான், அந்நாட்டு ராணுவம் நடத்திய தாக்குதலில் பொதுமக்கள் 45 பேர் வரை உயிரிழந்துள்ளனர். இதையடுத்தாவது அங்கு போர் நிறுத்தம் வருமா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.