மத்திய கிழக்கு ஆசிய நாடுகளின் போர் பதற்றத்திற்கு முக்கிய காரணமே அமெரிக்காதான் என ரஷ்யா வெளிப்படையாக  குற்றம் சாட்டியுள்ளது. இதற்கு , அமெரிக்கா பொறுப்பேற்க வேண்டும் எனவும் ஈரான் ஆதரவு நாடாக பார்க்கப்படும் ரஷ்யா ஐக்கிய நாடுகள் சபையில் தெரிவித்துள்ளது.


கோபத்துக்குள்ளான ஈரான்:


 


இஸ்ரேல் பாலஸ்தீனத்துக்கு இடையே போரானது ,  தொடர்ந்து நடைபெற்று வரும் நிலையில், பாலஸ்தீனத்திற்கு ஆதரவாக லெபனானில் உள்ள ஹிஸ்புல்லா என்ற அமைப்பும் தாக்குதல் நடத்தியது. இந்த நிலையில் அமெரிக்காவின் ஆதரவாக பார்க்கப்படும் இஸ்ரேல், பாலஸ்தீனத்தில் தனது முழு ஆதிக்கத்தையும் நிலை நிறுத்த வேண்டும் நோக்கில் செயல்பட்டு வருகிறது.


இந்த தருணத்தில்தான் ஹமாஸ் தலைவர் இஸ்மாயில் ஹனி மற்றும் ஹிஸ்புல்லா அமைப்பின் தலைவர் நஸ்ரல்லா ஆகியோரை ஏவுகணை தாக்குதல் மூலம் கொன்றது இஸ்ரேல்.


 


மேலும் , ஹமாஸ்-க்கு உதவி செய்து வருவதாகவும், ஹிஸ்புல்ல உள்ளிட்ட அமைப்புக்கு ஆதரவு வழங்கி வரும் காரணத்தை சுட்டிக்காட்டி,  ஈரான் ராணுவத் தலைவர்கள் சிலரையும் இஸ்ரேல் கொன்றது. இதனால் ஈரானும் கடும் கோபத்தில் இருந்து வந்தது.


 




ஹிஸ்புல்லா மீது இஸ்ரேல் தாக்குதல்:


 


மேலும் , கடந்த சில தினங்களாக  லெபனானில் உள்ள ஹிஸ்புல்லா அமைப்பை குறிவைத்து இஸ்ரேல் கடுமையான தாக்குதல் நடத்தி வந்தது. மேலும் , இது குறித்து ஈரான்  பெரிதாக எந்த கருத்தும் தெரிவிக்காமல் இருந்து வந்தது. மேலும் , இந்த ஈரான் போக்கானது , அண்டை நாடுகள் உள்ளிட்டவைகளின் நட்பு வட்டாரத்தில் இருந்து விலகுகிறதா என்றும் , இஸ்ரேலுக்கு அஞ்சுகிறதா என்றும் கேள்வி எழுந்தது. 


 


இஸ்ரேலை தாக்கிய ஈரான்:


 


இந்த நிலையில்தான், நேற்று இரவு இஸ்ரேல் நாட்டின் மீது சுமார் 200 க்கும் மேற்பட்ட ஏவுகணை தாக்குதலை நடத்தியது. பல ஏவுகணைகள் இஸ்ரேல் ஏவுகணை தடுப்பு அமைப்பு மூலம் தடுக்கப்பட்டதாக தகவல் தெரிவிக்கின்றன. மேலும் பல ஏவுகணகள் , இஸ்ரேல் தடுப்பு அமைப்பை மீறி தாக்குதல் நடத்தியதாகவும். அதற்கு காரணம், ஈரான் சூப்பர்சோனிக் ஏவுகணையை பயன்படுத்தியது என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.


 


ஆதரவாக களமிறங்கிய நாடுகள்:


 


இந்நிலையில், இஸ்ரேல் ஆதரவாக அமெரிக்காவும் களமிறங்கியதாகவும் தகவல் தெரிவிக்கின்றன. இதையடுத்து, இதற்கு காரணமே அமெரிக்காதான் காரணம் எனவும் ரஷ்யா வெளிப்படையாக குற்றம் சாட்டியிருக்கிறது. இஸ்ரேல் ஆதரவாக அமெரிக்கா களமிறங்கியுள்ள நிலையில், ஈரானுக்கு ஆதரவு நாடாக பார்க்கப்படும் ரஷ்யா வெளிப்படையாக அமெரிக்காவுக்கு கண்டனத்தை தெரிவித்திருக்கிறது.



 


பதற்றமான சூழலில் மத்திய கிழக்கு நாடுகள்:


 


மேலும் , கடுமையான தக்க பதிலளிப்போம் என இஸ்ரேல் தெரிவித்த நிலையில்,  தாக்குதல் நடத்தினால் எங்கள் தாக்குதல் , இதைவிட மோசமானதாக இருக்கும் என ஈரானும் எச்சரித்துள்ள நிலையில், அங்கு பதற்றமான நிலை நிலவுவதை உணர முடிகிறது.


இஸ்ரேல் தாக்கினால், அமெரிக்கா ஆதரவாக நிச்சயமாக வரும் எதிர்பார்க்கப்படுகிறது, அதே நிலையில் ஈரானுக்கு ஆதரவாக ரஷ்யா களமிறங்குமா என்றால் உறுதியாக கூறுவது கடினம் , ஏனென்றால் ரஷ்யா உக்ரைன் போரில் செயல்பாட்டில் உள்ளது, இந்த தருணத்தில் வருவது சந்தேகம்தான். ஆனால், எப்போது என்ன நடக்கும் என சொல்வது கடினம் . ஒருவேளை ரஷ்யா களத்திற்கு வந்தால், விபரீதம் மோசமானதாக இருக்க கூடும்.


 


இந்த தருணத்தில், மத்திய கிழக்கு பிராந்தியத்தில் மிகவும் பதற்றமான சூழல் நிலவுகிறது.