Watch Video: நட்சத்திர விடுதியில் தீ விபத்து.. 40 மேற்பட்டவர்களை மீட்ட தீயணைப்புத்துறை... பரபரப்பு வீடியோ

ஈராக் நாட்டில் நட்சத்திர விடுதில் ஏற்பட்ட தீ விபத்து தொடர்பான வீடியோ வேகமாக வைரலாகி வருகிறது.

Continues below advertisement

பொதுவாக சமூக வலைதளங்களில் விபத்து தொடர்பான வீடியோக்கள் வேகமாக வைரலாவது வழக்கம். அந்தவகையில் தற்போது ஒரு ஓட்டலில் ஏற்பட்ட தீ விபத்து தொடர்பான வீடியோ ஒன்று வேகமாக வைரலாகி வருகிறது. இது தொடர்பாக பலரும் வீடியோவை பதிவிட்டு வருகின்றனர். 

Continues below advertisement

ஈராக் நாட்டின் எர்பிள் பகுதியில் அமைந்துள்ள நட்சத்திர ஓட்டல் ஒன்றில் பயங்கரமான தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இந்த தீ விபத்தில் தற்போது வரை யாரும் உயிரிழக்கவில்லை என்ற தகவல் வெளியாகியுள்ளது. அத்துடன் இந்த தீ விபத்தில் பலருக்கு மூச்சு திணறல் ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. அவர்களுக்கு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாக தெரிகிறது. 

இந்த திடீர் தீ விபத்திற்கான காரணம என்ன வென்று அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த ஓட்டலில் சுமார் 40 பேர் தீ விபத்தின் போது இருந்ததாக கூறப்படுகிறது. இவர்களை தீயணைப்பு மற்றும் மீட்பு படையினர் பத்திரமாக மீட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. மேலும் அந்த தீயை தீயணைப்புத் துறையினர் நீண்ட போராட்டத்திற்கு பிறகு கட்டுக்குள் கொண்டு வந்து அனைத்துள்ளனர். இந்த விவகாரம் தொடர்பாக முதற்கட்ட விசாரணை நடைபெற்று வருகிறது. 

இவ்வாறு பலரும் இந்த தீ விபத்து தொடர்பாக தங்களுடைய ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டு வருகின்றனர்.

Continues below advertisement
Sponsored Links by Taboola