இனி இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவேற்றும் புகைப்படங்களையும் முழுத்திரையில் காண்பதற்கான அப்டேட் விரைவில் இடம்பெறும் என்று மார்க் சூக்கர்பெர்க் தனது பதிவு ஒன்றில் குறிப்பிட்டுள்ளார். இன்ஸ்டாகிராம் தளத்தில் இதுநாள் வரை சதுர வடிவில் மட்டுமே புகைப்படங்கள் பதிவேற்றப்பட்டு வந்த நிலையில் அதனை முழுத்திரையில் காண்பதற்கான அப்டேட்கள் தற்போது இடம்பெற இருக்கின்றன.இதனை இன்ஸ்டாகிராம், பேஸ்புக், வாட்சப் அப்ளிகேஷன்களின் தாய் நிறுவனமான மெட்டா தலைவர் மார்க் தனது பதிவில் தெரிவித்துள்ளார்.



முன்னதாக, பல அப்டேட்களை இதுநாள்வரை புகுத்தி வருகிறது இன்ஸ்டாகிராம். இன்றைக்கு பலரும் பொழுதுப்போக்கிற்காக பயன்படுத்தும் தளமாக மாறிவிட்டது  இன்ஸ்டாகிராம். இன்ஸ்டாகிராமின் வளர்ச்சி என்பது கடந்த ஐந்து ஆண்டுகளில் boom ஆனதுதான் என்றாலும் கூட, இந்த ஷார்ட் பீரியடில் எக்கச்சக்க வசதிகளை இன்ஸ்டாகிராம் அறிமுகப்படுத்தியுள்ளது. புதுமையான முறையில் தரமான வசதிகள் மூலம் பயனாளர்களை தக்க வைத்துக்கொள்கிறது இன்ஸ்டாகிராம். அதற்கு இன்ஸ்டா கையாளும் மார்கெட்டிங் யுக்தியும் ஒரு காரணம் . சரி விஷயத்திற்கு வருவோம், இன்ஸ்டாகிராம் சமீபத்தில் ஏகப்பட்ட புதிய வசதிகளை பயனாளர்கள் அறிமுகப்படுத்தியுள்ளது அதை கீழே காணலாம்.


இன்ஸ்டாகிராமில் அறிமுகமாகியுள்ள புதிய வசதிகள் :


ரீல்ஸ் நீளம் :


இன்ஸ்டாகிராம் இப்போது ரீல்ஸின் நீளத்தை 90 வினாடிகள் வரை நீட்டிப்பதாகக் கூறியுள்ளது. "உங்களைப் பற்றி அதிகம் பகிர உங்களுக்கு அதிக நேரம் கிடைக்கும், கூடுதல் திரைக்குப் பின்னால் உள்ள கிளிப்களை படமாக்குங்கள்” என தனது பதிவில் இன்ஸ்டாகிராம் தெரிவித்துள்ளது.


ஆடியோ :


இன்ஸ்டா ரீல்ஸ் செய்பவர்கள் முன்னதாக வேறு ஒருவரின் ஆடியோவை மட்டுமே பயன்படுத்த முடிந்த நிலையில், தற்போது சொந்த குரலையோ அல்லது வீடியோவில் உள்ள ஆடியோவை பயன்படுத்தும் வசதியை பயன்பாட்டிற்கு கொண்டு வந்துள்ளது. இதற்காக  import audio என்னும் வசதி கொடுக்கப்பட்டுள்ளது. இது குறித்து கூறும் பொழுது “உங்கள் கேமரா ரோலில் குறைந்தது ஐந்து வினாடிகள் நீளமுள்ள எந்த வீடியோவிலிருந்தும் ஆடியோ அம்சத்தை பயன்படுத்தலாம்“ என தெரிவித்துள்ளது.


டெம்ப்ளேட் :


இன்ஸ்டாகிராம் சமீபத்தில் டெம்ப்ளேட்களை அறிமுகப்படுத்தியுள்ளது. இது பயனர்கள் மற்றொரு டெம்ப்ளேட்டாக ஒரு ரீலை எளிதாக உருவாக்க அனுமதிக்கிறது. இது ஆடியோ மற்றும் கிளிப் பிளேஸ்ஹோல்டர்களை முன்கூட்டியே ஏற்றுகிறது, எனவே அனைத்து பயனர்களும் தங்கள் தனிப்பட்ட கிளிப்களைச் சேர்த்து முறையாக்க வேண்டும் .



இன்ஸ்டாகிராமிலும்  யூடியூப் மற்றும் சில வீடியோ ஸ்ட்ரீமிங் தளங்களை போலவே பயனாளர்கள் பணம் ஈட்டும் வசதி விரைவில் அறிமுகமாகவுள்ளது குறிப்பிடத்தக்கது.