இணையமும் இன்டர்நெட் எக்ஸ்ப்ளோரரும் பிரிக்க முடியாதவை. பிரிக்கக் கூடாதவை. இணையக் கதவை திறந்த சாவி. அதைக் கொடுத்தது பில் கேட்ஸின் மைக்ரோசாஃப்ட். இணையப் பயன்பாடு வளரவளர இன்டர்நெட் எக்ஸ்ப்ளோரர் பல வெர்ஷன்களைக் கண்டது. ஆனாலும் நெருப்பு நரி என்று செல்லமாக அழைக்கப்படும் ஃபையர் ஃபாக்ஸ் மற்றும் கூகுள் க்ரோம் பிரவுசர்களுடன் போட்டிபோட முடியவில்லை. அதனால் தன் சகாப்தத்தை இன்டர்நெட் எக்ஸ்ப்ளோரர் முடித்துக் கொண்டுள்ளது. இதற்கான அறிவிப்பை அண்மையில் மைக்ரோசாஃப்ட் நிறுவனம் வெளியிட்டது.


இன்டர்நெட் எக்ஸ்ப்ளோரர் கல்லறை.. 


இந்நிலையில் இணையத்தில், இன்டர்நெட் எக்ஸ்ப்ளோரர் கல்லறை.. என்றொரு புகைப்படம் வைரலாகி வருகிறது. தென் கொரியாவில் தான் இந்த கல்லறை அமைக்கப்பட்டுள்ளது. அந்தக் கல்லறையில் தோற்றம் 17.8.1995 மறைவு 15.6.2022 என்று எழுதப்பட்டுள்ளது. கூடவே, அது மற்ற பிரவுசர்களை டவுன்லோடு செய்துகொள்ள ஒரு நல்ல உபகரணமாக இருந்தது என்று புகழஞ்சலி வார்த்தைகள் பொரிக்கப்பட்டுள்ளது. அந்த புகைப்படத்தை நன்றி மறவாத நெட்டிசன்கள் வைரலாக்கி துக்கம் அனுசரித்து வருகின்றனர்.






இன்டர்நெட் எக்ஸ்ப்ளோரர் வரலாறு:


கம்ப்யூட்டர் என ஒன்று பிரபலமடைந்த காலக்கட்டத்தில் அதனுடனே பயணித்த தேடுபொறுதா இன்டர்நெட் எக்ஸ்ப்ளோரர்.  இதனை பயன்படுத்தாத 90'S kids களே இருக்க முடியாது. இன்டர்நெட் எக்ஸ்புளோரர் 2003 இல் 95% பயனர் பங்குடன்  உச்சத்தை  தொட்டது. உலகின் முன்னணி தேடுபொறியாக இருந்த Internet Explorer , கூகுளின் குரோம் வந்த பிறகு மிகப்பெரிய அடி வாங்கியது.  மற்ற  பிரவுசர்களை காட்டிலும் இன்டர்நெட் எக்ஸ்ப்ளோரர் ஸ்லோவாகவே இயங்கியது. அதன் பிறகு மைக்ரோசாஃப்ட் நிறுவனத்திற்கு சொந்தமான   Internet Explorer சில அடிப்படை விஷயங்களில் மாற்றங்களை கொண்டு வந்தது. அப்போதும் அதற்கு மவுசு இல்லை. இதனால் அந்த நிறுவனம்  Internet Explorer ஐ நிரந்தரமாக மூட முடிவெடுத்தது. 


குட் பை இன்டர்நெட் எக்ஸ்ப்ளோரர்!


இந்நிலையில் நேற்றுடன் (ஜூன் 15 ) இன்டர்நெட் எக்ஸ்ப்ளோரர் பயன்பாட்டை அந்த நிறுவனம் முற்றிலுமாக நிறுத்துகிறது. இன்டர்நெட் எக்ஸ்புளோரர் ஆகஸ்ட் 1995 இல் அறிமுகமானது.1996 இல்  ஜாவாஸ்கிரிப்ட் புரோகிராம் செய்யப்பட்டு  JPEGகள் மற்றும் GIFகளைப் பார்க்க பயனர்களை அனுமதித்தது. இன்றைக்கு நம்பர் ஒன் தேடுபொறியாக இருக்கும் குரோம் போன்றவற்றிற்கு இண்டர்நெட் எக்ஸ்ப்ளோரர்தான் முன்னோடி என்றால் மிகையில்லை. 


மைக்ரோசாஃப்ட் எட்ஜ் 


ஆனாலும்


முற்றுப்புள்ளி அருகில் நீயும்
மீண்டும் சின்னப் புள்ளிகள் வைத்தால்..


என்ற பாடல் வரிகள் போல் இன்டர்நெட் எக்ஸ்ப்ளோரருக்கு மாற்றாக மைக்ரோசாஃப்ட் எட்ஜ் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இதில்  இன்டர்நெட் எக்ஸ்ப்ளோரர் மோட் இருப்பதால் பயனாளர்கள் பயன்படுத்திக்கொள்ளலாம் என்றும் பல வருடங்களாக எங்களுக்கு ஆதரவு கொடுத்த மக்களுக்கு நன்றி என உருக்கமாக தெரிவித்துள்ளது.