பாம்பை கண்டால் படையும் நடுங்கும் என்பார்கள். ஏனென்றால் பாம்பின் நச்சுத்தன்மையின் குணமே அதற்கு காரணம். நச்சுத்தன்மை பாம்புகள் ஒரு பக்கம் என்றால் ஆளையே விழுங்கும் மலைபாம்புகளும் இருக்கிறது. அந்த வகையில் ஆளையே விழுங்கும் மலைப்பாம்புகள் அதிகம் உள்ள நாடுகளில் ஒன்று இந்தோனேசியாவும் ஒன்றாகும்.

Continues below advertisement

மாயமான பெண்:

இந்தோனேசியாவில் அமைந்துள்ள தெற்கு சுலேவாசியா மாகாணத்தில் அமைந்துள்ளது கலேம்பங்க் கிராமம். இந்த கிராமத்தில் வசிப்பவர் 45 வயதான பெண்மணி பரீடா. பரீடாவிற்கு திருமணமாகி 4 குழந்தைகள் உள்ளனர். இந்த நிலையில், கடந்த வியாழக்கிழமை இரவு திடீரென பரீடா மாயமானார்.

வெளியில் சென்ற பரீடா வீட்டிற்கு வராததால் அவரது கணவரும், குடும்பத்தினரும் அதிர்ச்சி அடைந்தனர். இதையடுத்து, அவரைத் தேடியுள்ளனர். ஆனால், 3 நாட்களாகி தேடியும் பரீடா பற்றி எந்த தகவலும் இல்லை. இதனால், அவரது குடும்பத்தினர் மிகுந்த வேதனை அடைந்தனர்.

Continues below advertisement

மலைப்பாம்பின் வயிற்றில் உள்ளே பெண்:

இந்த நிலையில், அந்த பகுதியில் மலைப்பாம்பு ஒன்று உடல் வீங்கிய நிலையில் அசைவின்ற கிடந்துள்ளது. இதையடுத்து, அந்த பகுதி மக்களுக்கு சந்தேகம் ஏற்பட்டுள்ளது. இதையடுத்து, அப்பகுதி மக்கள் அனைவரும் சேர்ந்து பாம்பின் வயிற்றை அறுத்துப் பார்க்க முடிவு செய்துள்ளனர்.

இதையடுத்து, அந்த பாம்பின் வயிற்றை கிழித்துப் பார்த்த போது ஒரு பெண்ணின் தலை தெரிந்துள்ளது. உடனே பாம்பின் மீதி பாகத்தையும் கிழித்து பார்த்தபோது உள்ளே பரீடா சடலமாக இருந்துள்ளார். இதைக்கண்டு அவர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். இதையடுத்து, பரீடாவின் சடலத்தை மீட்டு அடக்கம் செய்தனர்.

முடிவுக்கு வருவது எப்போது?

இந்தோனேசியாவில் கடந்த சில ஆண்டுகளாகவே மலைப்பாம்புகளால் மனிதர்கள் விழுங்கப்பட்டு உயிரிழக்கும் சம்பவம் அதிகரித்து வருகிறது. இது அப்பகுதி மக்கள் மத்தியில் மிகப்பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

2018ம் ஆண்டு இதே தெற்கு சுலேவாசி முனா நகரத்தில் 54 வயதான பெண் இதேபோல மலைப்பாம்பு ஒன்றால் விழுங்கப்பட்டு உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது. இதேபோல, தொடர்ந்து மலைப்பாம்புகளால் விழுங்கப்பட்டு உயிரிழக்கும் சம்பவத்தை முடிவுக்கு கொண்டு வர வேண்டும் என்று அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

மேலும் படிக்க: திடீர் திருப்பம்! இபிஎஸ், ஓபிஎஸ்.. சசிகலாவை ஒன்றிணைக்க உருவானது அதிமுக ஒருங்கிணைப்புக் குழு!

மேலும் படிக்க: nnatural Sex : அதிர்ச்சி.. இயற்கைக்கு மீறிய பாலியல் உறவு தப்பில்ல.. நீதிமன்றம் தள்ளுபடி செய்த வழக்கு..!