ராணுவத்தில் பெண் அதிகாரிகளுக்கு மேற்கொள்ளப்படும் 'டூ ஃபிங்கர் விர்ஜினிட்டி டெஸ்ட்' பரிசோதனையை ரத்து செய்துள்ளதாக இந்தோனேசிய ராணுவத் தலைமை அதிகாரி தெரிவித்தார்.
பெண்களின் கன்னித்தன்மையை உறுதி செய்வதற்காக, அவர்களின் பிறப்புறுப்புப் பகுதி மருத்துவர்கள் கைகளைக் கொண்டு ஆராயப்படுகிறது. இந்த, 'டூ ஃபிங்கர் விர்ஜினிட்டி டெஸ்ட்' பெண்களுக்கு எதிரான அநீதி என்றும், அறிவியல் பூர்வமாக நிரூபிக்கப்படாத மருத்துவ முறை என்று உலக சுகாதார அமைப்பு முன்னதாக தெரிவித்திருந்தது.
முதன்முதலாக, 'Human Rights Watch' எனும் மனித உரிமை அமைப்பு, இந்தோனேசிய நாட்டில் ராணுவத்தில் சேரும் பெண் அதிகாரிகளுக்கு மேற்கொள்ளப்படும் கன்னித்தன்மை சோதனை குறித்த ஆய்வறிக்கையை வெளியிட்டது. 2014ல் வெளியான இந்த அறிக்கை, ஒட்டுமொத்த உலகத்தின் கவனத்தை ஈர்த்தது.
உலகம் முழுவதும் உள்ள மனித உரிமைகள் அமைப்புகள் கொடுத்து வந்த தொடர் அழுத்ததால், இந்தோனேசிய காவல்துறை தமது படையில் சேரும் பெண்களுக்கு கன்னித்தன்மை பரிசோதனையை ரத்து செய்வதாக 2015ல் அறிவித்தது. இருப்பினும், ராணுவப் படையில் இந்த நடைமுறை தொடர்ந்து பின்பற்றப்பட்டு வந்தது.
இந்த நடைமுறை, பெண்களின் மன நலம் மற்றும் உடல் சார்ந்த வேதனைகளை தருவதாக இந்தோனேசியா நாட்டின் முன்னாள் சுகாதாரத் துறை அமைச்சர் Nila Moeloek வெளிப்படையாக அறிவித்திருந்தார்.
இந்நிலையில், கடந்த மாதம் அந்நாட்டின் இராணுவத் தளபதி ஜெனரல் ஆண்டிகா பெர்கசா, ஆண்களைப் போலவே பெண் அதிகாரிகளுக்கும் மருத்துவப் பரிசோதனை சமநிலையில் இருக்க வேண்டும் என்று கூறினார். அனைவரும் ஒரே விதமான உடல் தகுதி தேர்வு, மற்றும் மருத்துவ தகுதி தேர்வுகளில் தகுதி பெற வேண்டும் என்றும் குறிப்பிட்டார்.
மேலும், வாசிக்க:
யப்பா.! வேற லெவல் ஸ்டெண்ட்ஸ் - மில்லியன் பேர் பார்த்த சிறுமியின் வைரல் வீடியோ!