Indonesia Earthquake :  இந்தோனேசியாவில் இன்று இரண்டு முறை சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டதால் மக்கள் பீதியடைந்துள்ளனர்.


இந்தோனேசியா கெபுலாவான்பது என்ற இடத்தில் இன்று அதிகாலை நிலநடுக்கம் ஏற்பட்டது. இன்று அதிகாலை ஏற்பட்ட நிலநடுக்கம் 6.2 என்ற ரிக்டர் அளவுகோலில் பதிவாகி உள்ளது. அதிகாலையிலேயே ஏற்பட்ட நிலநடுக்கத்தை தேசிய நில அதிர்வு மையம் உறுதிப்படுத்தியுள்ளது.


நிலநடுக்கம்:


இந்த நிலநடுக்கம் இந்தோனேசியா கெபுலாவான்பது என்ற பகுதியில் இருந்து 356 கிலோ மீட்டர் தொலைவில் ஏற்பட்டுள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அதிகாலையில் ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கம் காரணமாக வீடு, கட்டடங்கள் பயங்கரமாக குலுங்கின. இதனால் தூங்கிக் கொண்டிருந்த மக்கள் அலறியடித்து வீடுகளில் இருந்து வெளியேறி சாலைகளில்  தஞ்சம் அடைந்துள்ளனர்.  






சக்திவாய்ந்தது:


இதனை அடுத்து, சுமார் 2 மணி நேரம் கழித்து அதே பகுதியில் மீண்டும் நிலநடுக்கம் ஏற்பட்டது. கெபுலாவான்பது என்ற பகுதியில் ஏற்பட்ட நிலநடுக்கம் 5.8 ரிக்டர் அளவுகோலில் பதிவாகி உள்ளது. அதிகாலையிலேயே ஏற்பட்ட நிலநடுக்கத்தை தேசிய நில அதிர்வு மையம் உறுதிப்படுத்தியுள்ளது. 


கெபுலாவான்பது  என்ற பகுதியில் இருந்து 356 கிலோ மீட்டர் தொலைவில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. மேலும், முதல் நிலநடுக்கம் 43 கிலோ மீட்டர் ஆழத்தில் இருந்த நிலையில், இரண்டாவது நிலநடுக்கம் 40 கிலோ மீட்டர் ஆழத்தில் மையம் கொண்டிருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.


முன்னதாக, 


கடந்த இரண்டு மாதங்களில் மட்டும் உலகில் பல பகுதிகளில் பலமுறை நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. கடந்த 20ஆம் தேதி ஆப்கானிஸ்தானின் காபூலின் கிழக்கு பகுதியில்  4.3 என்ற ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. 


தொடர் நிலநடுக்கங்கள்:


மார்ச் 17ஆம் தேதி ஜப்பானின் ஹொக்கைடோ என்ற பகுதியில் ஏற்பட்ட சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 6.1 ஆக பதிவாகியுள்ளது. கடந்த 12ஆம் தேதி ராஜஸ்தான் மாநிலம் பிகானேரில் 4.2 என்ற ரிக்டர் அளவில் நள்ளிரவு 2.16 மணியளவில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. மார்ச் 22ஆம் தேதி ஆப்கானிஸ்தானின் இந்து குஷ் பகுதியில் நேற்று ஏற்பட்ட 6.6 ரிக்டர் அளவிலான நிலநடுக்கத்தில் பாகிஸ்தானை சேர்ந்த 9 பேர் உயிரிழந்தனர்.


 மார்ச் 16ஆம் தேதி குஜராத்தின் துவாரகா பகுதியில் காலை 6.30 மணியளவில் லேசான நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டர் அளவுகோலில் 4.3 புள்ளியாக இந்த நிலநடுக்கம் பதிவானது.


இவை அனைத்தும் துருக்கியில் ஏற்பட்ட மோசமான நிலநடுக்கத்தை ஒப்பிடும் போது லேசானது. ஆனாலும் துருக்கி – சிரியாவில் ஏற்பட்ட நிலநடுக்கம் உலகை சோகமாக்கிய நிலையில் அடுத்தடுத்து நிலநடுக்கங்கள் ஏற்படுவதால் மக்கள் பீதியில் உள்ளனர்.