Airlines : நடுவானில் பயணிக்கு போதை தலைக்கேறியதால் விமான பணியாளரிடம் அத்துமீறிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


சமீப காலமாக, விமானத்தில் பல்வேறு சர்ச்சை சம்பவங்கள் அரங்கேறி வருகிறது. ஏர் இந்தியா விமானத்தில் வயதான பெண் பயணி மீது சக பயணி ஒருவர், சிறுநீர் கழித்த சம்பவம் நாடு முழுவதும் அதிர்ச்சி அலைகளை ஏற்படுத்தியது.


இந்த சம்பவத்தின் காரணமாக ஏற்பட்ட பரபரப்பு அடங்குவதற்கு முன்பாக விமான பணியாளரிடம் பயணி ஒருவர் அத்துமீறிய சம்பவம் பெரும் பிரச்னையாக வெடித்தது. இப்படி, சர்ச்சை மேல் சர்ச்சை வெடித்து வரும் சூழலில், மேலும் ஒரு சர்ச்சை வெடித்துள்ளது. 


நடுவானில் ரகளை


அமெரிக்காவின் மினியாபோலிஸ் நகரில் இருந்து அலாஸ்காவிற்கு டெல்டா ஏர்லைன்ஸ் நிறுவனத்திற்கு சொந்தமான பயணிகள் விமானம் ஒன்று சென்று கொண்டிருந்தது. அப்போது இந்த விமானத்தின் முதல் வகுப்பில் டேவிட் ஆலன் பர்க் (61) முதியவர் ஒருவர் பயணம் செய்து கொண்டிருந்தார்.


பின்பு, விமானம் டேக் ஆப் ஆனதும் அந்த முதியவருக்கு மதுபானம் கொடுக்கப்பட்டது. மதுபோதையில் அந்த விமானி ஆண் பணியாளரிடம் ரகளையில் ஈடுபட்டுள்ளார். விமான ஊழியரிடன் நீங்கள் அழகாக இருக்கிறீர்கள் என்று கூறியதோடு அவரை வலுக்கட்டாயமாக இழுத்து கழுத்தில் முத்தம் கொடுத்துள்ளார். அதோடு இல்லாமல் விமானிக்கு கொண்டு சென்ற உணவு டிரேவையும் இழுத்து சேதப்படுத்தியுள்ளார். 


அத்துமீறிய முதியவர்


குடுபோதையில்  ரகளையில் ஈடுபட்ட முதியவரை சுமார் 1 மணி நேரத்திற்கு பிறகு அவரை சக பயணிகள் அவரது இருக்கையில் அமர வைத்தனர். விமானம் நடுவானில் சென்று கொண்டிருந்தபோது ஏற்பட்ட இந்த தகராறு குறித்து விமான நிலையத்தை தொடர்பு கொண்டு இதுபற்றி விமானி தகவல் தெரிவித்தார். 


அலாஸ்கா என்ற இடத்திற்கு விமானம் தரையிறங்கியதும் முதியவரிடம் விமான நிலைய பாதுகாப்பு அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டனர். ஆனால் விமானத்தில் தான் அத்துமீறிய செயல்களை அவர் ஒப்புக்கொள்ளாமல் மது அருந்தியதை மட்டும் அதிகாரிகளிடம் கூறினார். 


இதனை அடுத்து, விமான பணியாளர் அளித்த புகாரில், ரகளையில் ஈடுபட்ட பயணி மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. விசாரணைக்கு பிறகு அந்த  முதியவரை விமான நிலைய பாதுகாப்பு அதிகாரிகள் விடுவித்தனர்.  பின்னர், வரும் 27ஆம் தேதி நீதிமன்ற விசாரணைக்கு ஆஜராக வேண்டும் என்றும் உத்தரவிட்டனர்.  நடுவானில் போதை தலைக்கேறியதால் விமான பணியாளரிடன் அத்துமீறிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.




மேலும் படிக்க


Amritpal Singh: காலிஸ்தான் ஆதரவாளர் அம்ரித்பால் சிங் போலீசில் சரண்..! பஞ்சாபில் பதற்றம்..!


Rahul Gandhi : உண்மையை பேசுவதற்கு என்ன விலை கொடுக்கவும் தயார்.. அரசு பங்களாவை காலி செய்த ராகுல் காந்தி..