சமூகவலைதளங்களில் எப்போதும் குழந்தைகள் தொடர்பான வீடியோக்கள் வைரலாவது வழக்கம். அதிலும் அந்த குழந்தைகள் ஏதாவது ஒரு சமார்த்தியமான விஷயத்தை செய்தால் அந்த வீடியோ நிச்சயம் வைரலாகிவிடும். அந்தவகையில் தற்போது சிறுமி ஒருவர் செய்யும் சாகாச வீடியோ வேகமாக வைரலாகி வருகிறது. 


இந்தச் சம்பவம் தொடர்பாக ஒருவர் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அதில் சிறுமி ஒருவர் வேகமாக தயாராகி மரத்தை தன் கைகளால் குத்தி உடைக்கும் காட்சிகள் இடம்பெற்றுள்ளன. இந்த வீடியோவை பலரும் ஆச்சரியத்துடன் வியந்து பார்த்து வருகின்றனர். 


 






இப்படி பலரும் ஆச்சரியத்துடன் வியந்து பார்க்கும் இந்த வீடியோ 2017ஆம் ஆண்டு வெளியான வீடியோ என்பது தெரியவந்துள்ளது. மேலும் அந்த வீடியோவில் இருப்பது ஒரு ரஷ்யாவைச் சேர்ந்த 12 வயது சிறுமி எவ்னிகா சடவாஸ். இவருடைய குடும்பத்தின் சார்பில் இந்த வீடியோ 2017ஆம் ஆண்டு இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இந்த வீடியோ பதிவிடப்பட்டுள்ளது. அந்த வீடியோவை சுமார் 7 லட்சத்திற்கும் மேற்பட்டவர்கள் பார்த்து ரசித்துள்ளனர். எவ்னிகாவிற்கு சிறு வயது முதல் குத்துச்சண்டை மீது ஆர்வம் அதிகரித்துள்ளது. இதன்காரணமாக பல நாட்களாக குத்துச்சண்டை பயிற்சியை இவர் மேற்கொண்டுள்ளார். 






தற்போது அந்த வீடியோ தான் 4 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டப்பட்டுள்ளது. அத்துடன் தற்போது அந்த வீடியோ சமூக வலைதளத்தில் பலரையும் கவர்ந்துள்ளது. 


மேலும் படிக்க: மனிதருக்கு பன்றியின் இருதயம் பொருத்திய மருத்துவர்கள்..! உலகிலேயே முதல் முறையாக சாதனை! அது எப்படி சாத்தியம்?