லண்டனில் முதுகலை பட்டம் பெற்ற இந்திய இளைஞர் ஒருவர் பட்டமளிப்பு விழாவில் கர்நாடக மாநிலக் கொடியை பிடித்து பெருமைப்பட்டது விமர்சனங்களைப் பெற்று வருகிறது.


கர்நாடகாவைச் சேர்ந்த ஆதீஷ் ஆர் வாலி. இவர் லண்டன் சிட்டி யுனிவர்சிட்டியில் எம்எஸ் பயின்று வந்தார். மேனேஜ்மென்ட் துறையில் இவர் பட்டம் பெற்றிருந்தார். இந்நிலையில் அவர் பட்டமளிப்பு மேடையில் உற்சாகமாக ஏறினார். பட்டத்தைப் பெறும் முன் தனது கோட்டுக்குள் வைத்திருந்த கர்நாடக கொடியை எடுத்துப் பிரித்து மகிழ்ச்சியுடன் உயர்த்திக் காட்டினார். பின்னர் உற்சாகமாக பட்டத்தை பெற்றுக் கொண்டு சென்றார்.


இது தொடர்பாக அதீஷ் வாலி தனது சமூக வலைதளப் பக்கத்தில், நான் எம்எஸ் மேனேஜ்மென்ட் பட்டம் பெற்றேன். எனது பட்டத்தைப் பெறும் முன்னர் மேடையில் எனது மாநிலக் கொடியை உயர்த்திப் பிடித்தேன். அது உண்மையில் ஒரு பெருமித தருணம் என்று பதிவிட்டிருந்தார்.






அவருடைய இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. இந்த வீடியோவை அதீஷ் கடந்த ஜனவரி 21 ஆம் தேதி பகிர்ந்துள்ளார். இப்போது வரை இந்த வீடியோ 1 லட்சம் வியூவ்ஸ் கடந்து கொண்டாடப்பட்டு வருகிறது.






கர்நாடக மாநில மக்கள் இந்த வீடியோவை வெகுவாகக் கொண்டாடி வருகின்றனர். அதீஷின் பதிவின் கீழ் ஒரு பதிவர், கர்நாடகா இப்போதும் எப்போதும் இந்தியாவின் மகள் என்பதில் ஐயமில்லை. கர்நாடக மாநில பாடலின் முதல் வரியில் ஜெய பாரத ஜனனிய தனு ஜாதே, ஜெய ஹே கர்நாடக மாதே என்ற வார்த்தைகள் தான் உள்ளன. இதன் மூலம் இந்தியாவின் மீது கன்னடர்களின் விசுவாசத்தை கேள்விக் குறியாக்க வேண்டாம் என்று பதிவிட்டிருந்தார்.





;


இன்னொரு நபர், கன்னட மண்ணின் மீதான உங்களின் அன்பு அப்பழுக்கற்றது. உங்கள் சாதனைக்கு வாழ்த்துகள். வெளிநாடுகளில் இருக்கும் ஒவ்வொருவரும் இதுபோன்று பின்பற்றுவார்கள் என்று எதிர்பார்க்கிறேன் என்று தெரிவித்துள்ளார்.