இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி தன்னுடன் தொலைபேசியில் பேசியதாக உக்ரைன் அதிபர் வோலோடிமிட் செலென்ஸ்கி தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் கூறியுள்ளார். அதில் அவர் ரஷ்யாவின் படையெடுப்பு, உக்ரைன் மண்ணில் 1 லட்சம் ரஷ்ய படையினர் குவிந்துள்ளதாகவும், அவர்கள் குடியிருப்புகளில் நெருப்பு வைப்பதாகவும், ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு சபையில் இந்தியா ஆதரவு தர வேண்டும் எனவும் வலிறுத்தியதாகத் தெரிவித்துள்ளார். 


இந்தியப் பிரதமர் அலுவலகம் தரப்பில் உக்ரைன் அதிபர் செலென்ஸ்கி, பிரதமர் மோடியிடம் ரஷ்யாவில் நடந்து கொண்டிருக்கும் போர் சூழல் குறித்து விளக்கியதாகக் கூறப்பட்டுள்ளது. உக்ரைனில் உள்ள போர் சூழல் காரணமாக அங்கு ஏற்பட்டிருக்கும் உயிர்ப் பலி, பொருள் சேதம் குறித்து பிரதமர் மோடி வருத்தம் தெரிவித்ததாகவும் கூறப்பட்டுள்ளது. 



Caption


 


சமாதானத்திற்கான முயற்சிகளில் பங்களிக்க இந்தியா விரும்புவதாகவும் பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். மேலும், உக்ரைனில் வாழும் இந்தியக் குடிமக்கள், குறிப்பாக மாணவர்கள், ஆகியோரின் பாதுகாப்பு குறித்து இந்திய அரசு சார்பில் பிரதமர் மோடி சுட்டிக் காட்டியுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது. இந்திய மக்கள் பாதுகாப்பாக வெளியேறுவது குறித்து உக்ரைன் அதிகாரிகளின் உதவியையும் பிரதமர் மோடி நாடியுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது. 


உக்ரைன் நாட்டின் மீது ரஷ்யா படையெடுத்துள்ள நிலையில், உக்ரைன் அரசு மேற்கத்திய நாடுகளின் உதவியை நாடியுள்ள சூழலில் உக்ரைன் அதிபரின் இந்தப் பதிவு வெளிவந்துள்ளது. 


உக்ரைன் விவகாரம் தொடர்பாக பிரதமர் மோடி ஏற்கனவே ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடினுடன் பேசியது குறிப்பிடத்தக்கது. 


ரஷ்யா, நோட்டோ படையினர் இடையிலான பிரச்னைகளை அமைதி பேச்சுவார்த்தை மூலமாக மட்டுமே சாத்தியப்படுத்த முடியும் எனப் பிரதமர் மோடி தன்னுடைய வாதத்தைக் கூறியதாகவும் கூறப்படுட்ள்ளது. மேலும், உடனடியாக போர் நிறுத்தம் மேற்கொள்வது, இரு தரப்பினரும் பேச்சு வார்த்தை மேற்கொள்ள அழைப்பு விடுத்துள்ளதாகவும் பிரதமர் மோடி தெரிவித்ததாக கூறப்பட்டுள்ளது. 






இந்த விவகாரம் தொடர்பாக பிரதமர் மோடியின் அறிவுரையை ஏற்பதாகவும் இரு நாட்டு அதிகாரிகளும் தொடர்ந்து உறவுகளை மேற்கொள்வதாகவும் தெரிவித்ததாக இந்தியப் பிரதமர் அலுவலகம் தெரிவித்துள்ளது.