கடந்த செப்டம்பர் 1ம் தேதி, சிங்கப்பூரில் அதிபர் தேர்தல் நடத்தப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட்டன. ஆசிய கண்டத்தின் நிதி தலைநகராக சிங்கப்பூர் திகழ்வதால், உலக நாடுகள் மத்தியில் இந்த தேர்தல் பெரும் கவனத்தை ஈர்த்தது. இந்த தேர்தலில் வெற்றிபெற்ற இந்திய வம்சாவளி தமிழரான தர்மன் சண்முகரத்னம், சிங்கப்பூரின் 9ஆவது அதிபராக தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
அதிபராக பதவியேற்கும் தமிழர் தர்மன் சண்முகரத்னம்:
அதிபர் தேர்தலில் 70.4 சதவீத வாக்குகளை பெற்று தர்மன் சண்முகரத்னம் வெற்றி பெற்றதாக சிங்கப்பூர் தேர்தல் ஆணையம் அறிவித்தது. சிங்கப்பூர் அதிபராக பதவி வகித்து வந்த ஹலிமா யாகூப்பின் 6 ஆண்டு பதவி காலம், இன்றுடன் முடிவடைகிறது. இந்த சூழலில், இன்று சிங்கப்பூர் அதிபராக தர்மன் சண்முகரத்னம் பதவியேற்கிறார்.
அண்டை நாடான இலங்கையை பூர்விகமாக கொண்ட தமிழ் வம்சாவளியைச் சேர்ந்தவர் தர்மன் சண்முகரத்னம். இவரது வயது 68 ஆகும். 2011 முதல் சிங்கப்பூர் நாணய வாரியத்தின் தலைவராக பணியாற்றி வருபவர். சிங்கப்பூரின் அரசாங்க முதலீட்டு நிறுவனமான இறையான்மை செல்வ நிதியின் துணைத்தலைவர், பொருளியில் வளர்ச்சி கழகத்தின் ஆலோசனை மன்ற தலைவராகவும் பொறுப்பு வகித்து வந்தார். 2019ஆம் ஆண்டு மூத்த அமைச்சராக நியமிக்கப்பட்டிருந்த தர்மன், பொருளியல் கொள்கைளை வகுப்பதில் பிரதமருக்கு ஆலோசனை வழங்கி வந்தார்.
ஜூரோங் தொகுதியில் இருந்து இதுவரை நான்கு முறை நாடாளுமன்ற உறுப்பினராக தேர்வு செய்யப்பட்டுள்ளார். தற்போது 66 வயதான தர்மன் சண்முகரத்னம் தனது 22 ஆண்டுகால அரசியல் பயணத்தில் சிங்கப்பூரின் பிரதமராகவும், நிதி அமைச்சராகவும், கல்வி அமைச்சராகவும், சமூதாய கொள்கைகளுக்கான ஒருங்கிணைப்பு அமைச்சராகவும் பதவி வகித்து வந்தார்.
சிங்கப்பூரில் கைமாறும் அதிகாரம்:
அதிபர் தேர்தலில் போட்டியிடுவதற்காக தனது அமைச்சர் பதவியை ராஜினாமா செய்ததோடு, மக்கள் செயல் கட்சியில் இருந்தும் விலகி உள்ளார். தர்மனின் விலகல் கட்சிக்கும், அமைச்சரவைக்கு பேரிழப்பு என சிங்கப்பூர் பிரதமர் லீ சியென் லூங் தெரிவித்திருந்தார்.
66 வயதான தர்மன் சண்முகரத்னம் 1957ஆம் ஆண்டு பிறந்தார். இவரது மனைவி ஜேன் யுமிகோ இட்டோகி. இவருக்கு நான்கு குழந்தைகள் உள்ளனர். சிங்கப்பூரில் தனது பள்ளி படிப்பையும் கல்லூரி படிப்பையில் முடித்தார். லண்டன் ஸ்கூல் ஆஃப் எகனாமிக்ஸில் இளங்களை பொருளியில் பட்டமும், கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தில் முதுகலை பொளியல் பட்டமும் பெற்றார்.
பின்பு, சிங்கப்பூரின் நாணய ஆணையத்தில் தனது பணியை தொடங்கினார். அங்கு தலைமைப் பொருளாதார நிபுணர் ஆனார். இதனை தொடர்ந்து 2001ஆம் ஆண்டு மக்கள் செயல் கட்சி சார்பில் போட்டியிட்டு தனது அரசியல் பயணத்தை தொடங்கினார் என்பது குறிப்பிடத்தக்கது.