கார்னல் பல்கலைக்கழகத்தின் ஜான்சன் காலேஜ் ஆஃப் பிசினஸின் பேராசிரியராக இருக்கும் சௌமித்ரா தத்தா ஆக்ஸ்போர்ட் பல்கலைக்கழகத்தின் பிசினஸ் பள்ளியின் டீனாக நியமிக்கப்பட்டுள்ளார். வருகின்ற ஜூனில் தத்தா பொறுப்பேற்க உள்ளார். சௌமித்ரா தத்தா இந்திய வம்சாவளியைச் சேர்ந்தவர். 






தத்தா பல அரசாங்கங்களுக்கு தொழில்நுட்பம் மற்றும் பல புதிய கொள்கைகளை உருவாக்குவதில் உதவியாக இருந்துள்ளார். நெட்வொர்க் ரெடினெஸ் இன்டெக்ஸ் மற்றும் குளோபல் இன்னோவேஷன் இன்டெக்ஸ் ஆகிய இரண்டு முக்கியமான குறியீடுகளைக் நிறுவியவர்.






 


சௌமித்ராவுக்கு இதையடுத்து வாழ்த்துகள் குவிந்தவண்ணம் உள்ளன. ஆனந்த் மஹிந்திராவின் வாழ்த்துச் செய்தியில் , ’நடைமுறையில் மட்டுமல்ல, வணிகத்தைக் கற்பித்தலிலும் இந்தியத் திறனைக் காட்டுகிறது’ எனக் குறிப்பிட்டுள்ளார். தத்தா மேலும் பல இந்திய வம்சாவளி சி.இ.ஓ.க்களை உருவாக்க உறுதுணையாக இருப்பார் என்றும் அவர் குறிப்பிட்டிருந்தார்.