அர்ஜெண்டினா நாட்டைச் சேர்ந்தவர் கிறிஸ்டைன் புல்டோஸ். இவர் அந்த நாட்டில் பிரபல ரவுடி ஆவார். இவர் மீது அந்த நாட்டில் உள்ள காவல் நிலையங்களில் ஏராளமான கொலை, கொள்ளை வழக்குகள் உள்ளது. இந்த இவரை பிடிப்பதற்காக சென்ற காவல்துறை அதிகாரியான லியாடிரோ ராபர்ட்ஸ் என்பவரை புல்டோஸ் துப்பாக்கியால் சுட்டுக்கொன்றார். இந்த விவகாரம் அந்த நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியதால், உடனடியாக புல்டோஸ் கைது செய்யப்பட்டார்.


அவருக்கு அந்த நாட்டு நீதிமன்றம் ஆயுள்தண்டனை விதித்து உத்தரவு பிறப்பித்தது. ஆனால், புல்டோஸ் தனக்கு விதிக்கப்பட்ட ஆயுள்தண்டனையை எதிர்த்து அந்த நாட்டு நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார். இதையடுத்து, அவரது ஆயுள்தண்டனையை குறைப்பது தொடர்பாக விசாரிப்பதற்காக ஒரு நீதிபதிகள் குழுவை அந்த நாட்டு நீதிமன்றம் நியமித்தது.   




அவர்கள் புல்டோசிடம் நடத்திய விசாரணையில், காவல்துறை அதிகாரியை சுட்டுக்கொன்றதை புல்டோஸ் ஒப்புக்கொண்டார். புல்டோஸ் மிகவும் ஆபத்தானவர் என்பதாலும், அவர் வெளியில் நடமாடினால் சமூக அமைதிக்கு ஆபத்து என்று கருதிய நீதிபதிகள் குழு அவரது ஆயுள்தண்டனையை குறைக்கக் கூடாது என்று பரிந்துரைத்தது. ஆனால், அந்த குழுவில் இடம்பெற்றிருந்த பெண் நீதிபதி மரியல் மட்டும் புல்டோசிற்கு ஆதரவாக பரிந்துரைத்தார். மேலும், அவரது ஆயுள்தண்டனையை குறைக்க வேண்டும் என்றும், அவரது தண்டனை காலத்தை மேலும் குறைக்க வேண்டும் என்றும் பரிந்துரைத்தார். அவரது கருத்தால் நீதிபதிகள் குழுவும், நீதிமன்றமும் அதிர்ச்சியில் உறைந்தது.






இந்த நிலையில், புல்டோஸ் அடைக்கப்பட்டிருந்த சி.சி.டி.வி. காட்சிகளை ஹாட்டிஸ்கிற்கு மாற்றியபோது, சிறை அதிகாரிகள் அதிர்ச்சியான காட்சி ஒன்றை கண்டனர். அதாவது, சிறையில் இருந்த புல்டோசிடம் விசாரணையில் ஈடுபட்டுக் கொண்டிருந்த மரியல் அவரது அருகில் நெருக்கமாக சென்றுள்ளார். அருகில் சென்ற அவர் சட்டென்று புல்டோசிற்கு உதட்டில் நெருக்கமான முத்தம் அளித்துள்ளார். இந்த காட்சிகளை கண்ட சிறை அதிகாரிகள் உடனடியாக நீதிபதிகள் குழுவிற்கு தகவல் அளித்தனர்.




இதையடுத்து, மரியலிடம் நீதிமன்றம் இதுதொடர்பாக விசாரணை நடத்தியது. அதற்கு பதிலளித்த மரியல், புல்டோசிடம் நெருக்கமாக நின்று விசாரித்துக்கொண்டுதான் இருந்ததாகவும், சி.சி.டி.வி. இருக்கும்போது இவ்வாறு செய்வேனா? என்றும் கேட்டு நீதிமன்றத்தையே பதில்கேள்வி எழுப்பியுள்ளார். மேலும், புல்டோஸ் பற்றி புத்தகம் எழுத உள்ளதாகவும் கூறி அனைவரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கி இருக்கிறார். சிறையில் உள்ள கொலைக்கார கைதிக்கு பெண் நீதிபதி முத்தம் கொடுத்ததுடன், புத்தகம் எழுதுவதாக கூறியிருப்பது அந்த நாட்டு மக்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.



மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடியூபில் வீடியோக்களை காண