இந்திய வம்சாவளியைச் சேர்ந்த சுனிதா வில்லியம்ஸ் சர்வதேச விண்வெளி ஆய்வு மையம் புறப்பட்டார் . இவருடன் அமெரிக்க கடற்படை கேப்டன் புட்ச் வில்மோரும் பயணம் செய்கிறார்.
விண்வெளி பயணம்:
இந்திய வம்சாவளியைச் சேர்ந்த சுனிதா வில்லியம்ஸ் மற்றும் அமெரிக்க கடற்படை கேப்டன் புட்ச் வில்மோர் ஆகிய இருவரும் அமெரிக்காவில் உள்ள கென்னடி விண்வெளி ஏவுதளத்தில் இருந்து, அட்லஸ் வி ராக்கெட் மூலம் விண்வெளி ஆய்வு மையம் புறப்பட்டனர்.
சுனிதா வில்லியம்ஸ்க்கு இது முதல் பயணமில்லை. கடந்த 2006ஆம் ஆண்டு மற்றும் 2012ஆம் ஆண்டு என சுனிதா வில்லியம்ஸ், இரண்டு முறை விண்வெளிக்கு சென்றிருக்கிறார். விண்வெளியில் மொத்தமாக 322 நாள்கள் தங்கியுள்ளார்.
இந்நிலையில் மூன்றாவது முறையாக விண்வெளி மையத்தில் உள்ள சர்வதேச ஆய்வு மையத்துக்கு புறப்படுவதற்காக சுனிதா வில்லியம்ஸ் திட்டமிட்டிருந்தார். ஆனால் , இந்த பயணமானது, பல்வேறு காரணங்களுக்காக மூன்று முறை ஒத்திப்போனது.
இந்நிலையில், இன்று இந்திய நேரப்படி சுமார் 8.30 மணி அளவில் விண்வெளி ஆய்வு மைய பயணம் திட்டமிடப்பட்டது. அதன்படி , இந்திய வம்சாவளியைச் சேர்ந்த சுனிதா வில்லியம்ஸ் மற்றும் அமெரிக்க கடற்படை கேப்டன் புட்ச் வில்மோர் ஆகிய இருவரும் அமெரிக்காவில் உள்ள கென்னடி விண்வெளி ஏவுதளத்தில் இருந்து, அட்லஸ் வி ராக்கெட் மூலம் விண்வெளி ஆய்வு மையம் புறப்பட்டனர்.
சுனிதா வில்லியம்ஸ்:
சுனிதா வில்லியம்ஸின் தந்தை குஜராத்தின் மெஹ்சானா மாவட்டத்தில் உள்ள ஜூலாசனில் பிறந்த நரம்பியல் நிபுணர் ஆவார். பின்னர், அமெரிக்காவிற்கு குடிபெயர்ந்து ஸ்லோவேனியரான போனி பாண்டியாவை மணந்தார் தீபக் பாண்டியா. இதையடுத்து, அமெரிக்காவில் வாழ்ந்து வரும் சுனிதா வில்லியம்ஸுக்கு தற்போது வயது 59. விண்வெளித் துறையில் மிகுந்த ஈடுபாடு கொண்டவராக சுனிதா வில்லியம்ஸ் இருக்கிறார்.
இவரின் , விண்வெளி ஆய்வு மையத்தின் புறப்படும் பயணமானது வெற்றிகரமாக அமைந்துள்ளது. இவரின் பயணத்துக்கு பலரும் வாழ்த்துகள் தெரிவித்து வருகின்றனர்.