அமெரிக்காவில் 74 வயதான இந்திய - அமெரிக்கர் ஒருவர் கலிபோர்னியா மாகாணத்தில் தனது மகனை விவாகரத்து செய்ய திட்டமிட்டதற்காக தனது மருமகளை வாகன நிறுத்துமிடத்தில் சுட்டுக் கொன்றதற்காக கைது செய்யப்பட்டுள்ளார். இதுகுறித்து நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது.


சிடல் சிங் டோசன்ஜ் என்பவரின் மருமகள் குர்ப்ரீத் கவுர் தோசாஞ் வால்மார்ட்டில் பணிபுரிந்து வருகிறார். கடந்த வாரம், தெற்கு சான் ஜோஸில் அமைந்துள்ள குர்ப்ரீத் பணிபுரியும் அலுவலகத்திற்கு சென்று வாகன நிறுத்துமிடத்தில் வைத்து கொலை செய்துள்ளார்.


பாதிக்கப்பட்ட பெண் வெள்ளிக்கிழமை அன்று தொலைபேசியில் தனது மாமாவிடம் சிடல் தன்னைத் தேடு வருகிறார் என்றும் அதனால் அச்சமாக இருப்பதாகவும் கூறியது போலீஸ் விசாரணையில் தெரிய வந்துள்ளது. சிடல் வாகனம் நிறுத்தும் இடத்தில் வாகனம் ஓட்டுவதைக் கண்டதாகவும், அவர் தன்னைக் கண்டுபிடிக்க 150 மைல்கள் பயணம் செய்து வந்ததையும் தனது மாமாவிடம் குர்ப்ரீத் கூறியுள்ளார்.


குர்ப்ரீத் வேலையில் இருந்து ஓய்வு எடுத்துக்கொண்டிருந்தபோது சிடல் தனது காரை நோக்கி நெருங்கி வந்ததாகவும் அப்போது அவர் அச்சத்தில் இருந்ததாகவும் குர்ப்ரீத்தின் மாமா காவல்துறையிடம் தெரிவித்துள்ளார்.


தொலைபேசி அழைப்பு துண்டிக்கப்படுவதற்கு முன்பு அவர் சொன்ன கடைசி வார்த்தை அதுதான் என குர்ப்ரீத்தின் மாமா தெரிவித்துள்ளார். ஐந்து மணி நேரம் கழித்து, வால்மார்ட்டில் பணிபுரியும் ஒருவர், குர்ப்ரீத்தின் உடலை அதே இடத்தில், அதே காரில், இரண்டு துப்பாக்கிச் சூட்டுக் காயங்களால் அவதிப்பட்டு வந்ததை கண்டுபிடித்தார். ஆனால், அவர் சம்பவ இடத்திலேயே இறந்துவிட்டார்.


குர்ப்ரீத்தின் மாமா விசாரணை அலுவலர்களிடம், அவரது மருமகள் குற்றம்சாட்டப்பட்டுள்ள நபரின் மகனை விவாகரத்து செய்ய திட்டமிட்டு இருந்தார் என்றும் கணவரும் அவரது தந்தையும் ஃப்ரெஸ்னோவில் வசித்து வந்தனர் என்றும் கூறினார். குர்ப்ரீத் சான் ஜோஸில் வசித்து வந்துள்ளார்.


குர்ப்ரீத் மரமண் குறித்து விசாரித்துக்கொண்டிருந்தபோது, ​​​​பாதிக்கப்பட்டவரின் மாமா, அவரது மருமகள் உயிருடன் இருப்பதைக் கேட்ட கடைசி நபர் என்றும் மத்திய பள்ளத்தாக்கிலிருந்து காரில் அவர் குற்றம் நடந்த இடத்திற்கு வந்துள்ளார் என்றும் கொலை துப்பறியும் அலுவலர்கள் தெரிவித்துள்ளனர்.
சந்தேக நபராக சிடல் டோசன்ஜை முறையாக அடையாளம் காண புலனாய்வாளர்களுக்கு அவர் உதவினார் என்று போலீசார் தெரிவித்தனர்.


மறுநாள் காலை, சிடல் ஃப்ரெஸ்னோவில் உள்ள அவரது வீட்டில் கைது செய்யப்பட்டார். குடியிருப்பில் நடத்திய சோதனையின் போது, ​​.22 கலிபர் பெரெட்டா துப்பாக்கியை போலீசார் கைப்பற்றினர்.


சிடல் சான் ஜோஸில் உள்ள பிரதான சிறைக்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கு அவர் ஜாமீன் வழங்கப்படாமல் காவலில் வைக்கப்பட்டுள்ளார். புதன் கிழமை சான் ஜோஸ் நீதிமன்ற அறையில் அவர் விசாரணையின் போது, ​​உயர் பாதுகாப்பு கைதிகளுக்காக ஒதுக்கப்பட்ட சிவப்பு நிற ஜம்ப்சூட் அணிந்திருந்தார். முகத்தில் நீல நிற முகமூடியை அணிந்திருந்தார். ஒரு வார்த்தை கூட பேசவில்லை. 


நவம்பர் 14 அன்று அவர் நீதிமன்றத்திற்கு திரும்ப உத்தரவிடப்பட்டுள்ளது.