பாலியல் வன்கொடுமை வழக்கில் கைதான 10 பேருமே, 11 முதல் 16 வயதுக்குட்ட சிறுவர்கள் என்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
14 வயது சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை:
பெல்ஜியம் நாட்டின் மேற்கு ஃபிளாண்டர்ஸின் கோர்ட்ரிஜ்க்கில் உள்ள, கபூட்டர்போஸ் என்ற காட்டுப் பகுதியில் 14 வயது சிறுமிக்கு நடந்த பாலியல் வன்மை கொடூரம் ஒட்டுமொத்த நாட்டையே உலுக்கியுள்ளது. அதேபகுதியைச் சேர்ந்த சிறுவன், குறிப்பிட்ட சிறுமியுடன் நெருங்கி பழகி காதலித்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் கடந்த ஏப்ரல் மாதம் ஈஸ்டர் விடுமுறை கொண்டாட்டத்தின் போது, அந்த சிறுமியை கபூட்டர்போஸ் காட்டுப்பகுதிக்கு அவன் அழைத்துச் சென்றுள்ளார். அப்போது அந்த சிறுமி அத்துமீறி நடந்துகொண்டதோடு, தனது நண்பர்களையும் அந்த பெண்ணுடன் உடலுறவு வைத்துக் கொள்ள அனுமதித்துள்ளான். மறுத்த சிறுமியை அந்த கும்பல் அடித்து மிரட்டியுள்ளது.
10 சிறுவர்கள் கைது..!
ஏப்ரல் 2ம் தேதி தொடங்கி ஏப்ரல் 6ம் தேதி வரை மூன்று முறை, அந்த சிறுமிக்கு இந்த கும்பல் பாலியல் தொல்லை கொடுத்துள்ளது. ஒருமுறை தொடர்ந்து இரண்டு நாட்கள் அந்த சிறுமியை காட்டில் பிடித்து வைத்து, பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர். அச்சம் காரணமாக, இதுதொடர்பாக அந்த பெண் வீட்டில் தெரிவிக்காமல் இருந்துள்ளார். இதனிடையே, இந்த நிகழ்வுகளை செல்ஃபோனில் படம்பிடித்து, சமூக வலைதளங்களிலும் அந்த சிறார் கும்பல் பகிர்ந்து உள்ளது. அவை இணையத்தில் வைரலானதுமே, இரண்டு வார தீவிர விசாரணைக்குப் பிறகு குற்றத்தில் ஈடுபட்ட 10 சிறுவர்களை பெல்ஜியம் போலீசார் கைது செய்தனர். அவர்கள் அனைவருமே 11 வயது முதல் 16 வயதைச் சேர்ந்தவர்கள் என்பது விசாரணையில் தெரிய வந்துள்ளது. இதனிடையே, பாதிக்கப்பட்ட சிறுமிக்கு தேவையான உதவிகளையும், ஆலோசனைகளையும் அதிகாரிகள் வழங்கி வருகின்றனர்.
யார் இந்த குற்றவாளிகள்?
கைதானவர்கள் அனைவரும் வெளிநாட்டில் இருந்து புலம்பெயர்ந்து வந்தது, பெல்ஜியத்தில் தங்கியிருக்கும் நபர்களின் பிள்ளைகள் என நம்பப்படுகிறது. இவர்களில் 6 பேரை ஓரிடத்திலும், மற்ற 4 பேரை மற்றொரு இடத்திலும் வீட்டு சிறையிலும் வைத்துள்ளனர். சிறுவர்கள் என்பதால் கூடுதல் விவரங்களை வெளியிடாத காவல்துறை, குற்றம்சாட்டப்பட்ட அனைவரையும் உரிய முறையில் அடையாளம் கண்டு கைது செய்துள்ளதாக விளக்கம் அளித்துள்ளது. தொடர்ந்து, இந்த வழக்கில் கைதான ஒவ்வொருவரையும் போலீசார் தனித்தனியே விசாரித்து வருகின்றனர். அதன் மூலம் குற்றச்சம்பவம் தொடர்பான துல்லியமான தகவல்கள் சேகரிக்கப்பட்டு வருகின்றனர்.
ஸ்மார்ட் ஃபோன்கள் மற்றும் சமூக வலைதளங்களின் பயன்பாடு அதிகரித்த பிறகே, இதுபோன்ற நிகழ்வுகளின் எண்ணிக்கை அதிகம் நிகழ்ந்து வருவதாக குற்றச்சாட்டுகள் குவிந்து வருகின்றன. இந்த விவகாரத்தில் குற்றவாளிகள் நிச்சயம் தண்டிக்கப்பட வேண்டும் எனவும், பல்வேறு தரப்பினரும் வலியுறுத்தி வருகின்றனர்.