இளவரசர் ஷேக் ஹஸ்ஸா பின் சுல்தான் பின் சயீத் அல் நஹ்யான்:


அபுதாபி இளவரசர் ஷேக் ஹஸ்ஸா பின் சுல்தான் பின் சயீத் அல் நஹ்யான் காலாமானார். இவர் ஐக்கிய அரபு அமீரகத்தின் அதிபர் ஷேக் முகமது பின் சயீத் அல் நஹ்யானின் மூத்த மகனாவார்.  இவருக்கு பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். 


அபுதாபி இளவரசர் ஷேக் ஹஸ்ஸா பின் சுல்தான் பின் சயீத் அல் நஹ்யான்  நேற்று காலமானதாக அபுதாபி அதிபர் அலுவலகம் தெரிவித்துள்ளது. அதிபர் அலுவலகம் வெளியிட்டுள்ள இரங்கல் குறிப்பில் தெரிவித்ததாவது,  இறைவன், இவருக்கு  பரந்த கருணையை கொடுக்க வேண்டும்,  அவருக்கு சொர்க்கத்தை வழங்க வேண்டும் எனவும் தெரிவித்துள்ளது. மேலும்  அவரது குடும்பத்தினருக்கும், உறவினர்களுக்கும் ஆறுதலை வழங்க எல்லாம் வல்ல இறைவன் அல்லா அருள் புரிய வேண்டும் எனவும் அதிபர் அலுவலகம் தெரிவித்துள்ளது.  


குதிரை ஏற்ற வீரர்:


ஷேக் ஹஸ்ஸா பின் சுல்தான் பின் சயீத் அல் நஹ்யான், அவரது வயது குறித்து தகவல் ஏதும் வெளியிடப்படவில்லை. இவர் குதிரை சவாரி செய்யும் வல்லமை கொண்டவர் என பார்க்கப்படுகிறது.  அவரது அசாதாரண குதிரை ஏற்ற திறமைக்காக குதிரையேற்ற வட்டாரங்களில் புகழ் பெற்றதாக கூறப்படுகிறது. ஷேக் ஹஸ்ஸா பின் சுல்தான் பின் சயீத் அல் நஹ்யானுக்கு, அபுதாபியின் ஷேக் சுல்தான் பின் சயீத் முதல் மசூதியில் ஏராளமான ஷேக்குகளும்,  பிற மக்களும்  வியாழக்கிழமை பிற்பகல் அல் பாடீன் கல்லறையில்  இறுதிச் சடங்குகளை செய்தனர் என்ற தகவல் தெரிவிக்கின்றனர். 


இரங்கல் தெரிவிப்பு: 



 ஐக்கிய அரபு எமிரேட்ஸை தளமாகக் கொண்ட பல சமூக ஊடக கணக்குகளும் ஷேக் ஹஸ்ஸாவின் மறைவுக்கு இரங்கல் தெரிவித்தனர். அபுதாபியின் பட்டத்து இளவரசர் ஷேக் கலீத் பின் முகமது பின் சயீத் அல் நஹ்யான்,  ஐக்கிய அரபு எமிரேட்ஸ் அதிபர் ஷேக் முகமது பின் சயீத் அல் நஹ்யானின் மூத்த மகனாவார்.  அபுதாபியின் ஆளும் நஹ்யான் குடும்பத்தைச் சேர்ந்த பலர் இறுதிச் சடங்குகளில் கலந்து கொண்டனர்