குறைவான விலையில் ஸ்மார்ட்போன்களை விற்று வரும் சீன நிறுவனங்களை கட்டுப்படுத்தும் விதமாக இந்தியா நடவடிக்கை ஒன்றை எடுக்க உள்ளது. பலவீனமாக உள்ள உள்நாட்டு சந்தையை மேம்படுத்தும் விதமாக 12 ஆயிரம் ரூபாய்க்கு குறைவாக இருக்கும் ஸ்மார்ட்போன்களை விற்க சீன நிறுவனங்களுக்கு கட்டுபாடு விதிக்கப்பட உள்ளது. இதன் காரணமாக, சியோமி கார்ப் நிறுவனம், பெரும் பாதிப்பை சந்திக்க உள்ளது.


உலகிலேயே இரண்டாவது மிக பெரிய மொபைல் சந்தையாக இந்தியா திகழ்கிறது. இங்குள்ள குறைந்த விலை மொபைல் சந்தையிலிருந்து பெரும் சீன நிறுவனங்களை வெளியேற்றும் வகையில் இந்த நடவடிக்கை பார்க்கப்படுகிறது. உள்நாட்டு உறுபத்தியாளர்களை ரியல்மி மற்றும் டிரான்சியன் நிறுவனங்கள் குறைத்து வருவதாக கவலை தெரிவிக்கப்பட்டு வரும் நிலையில், இந்த நடவடிக்கை முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.


இந்தியாவின் நுழைவு நிலை சந்தையில் இருந்து விலக்கப்படுவது சியோமி உள்பட பல சீன நிறுவனங்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தும். சமீபத்திய ஆண்டுகளில் வளர்ச்சியை அதிகரிக்க இந்நிறுவனங்கள் இந்தியாவையே அதிகளவில் நம்பியுள்ளன. 


அதே நேரத்தில், சீன சந்தையில் தொடர்ச்சியான கரோனா முடக்கத்தால் இந்நிறுவனங்கள் பெரும் பாதிப்பை சந்தித்திருந்தன. ஜூன் 2022 வரையிலான காலாண்டில், 150 அமெரிக்க டாலர்களுக்கு குறைவாக விற்கபடும் ஸ்மார்ட்ஃபோன்கள் இந்தியாவின் விற்பனை அளவின் மூன்றில் ஒரு பங்காக உள்ளன. சீன நிறுவனங்கள் அந்த ஏற்றுமதிகளில் 80% வரை உள்ளன என கூறப்படுகிறது.


இது தொடர்பாக மோடி அரசு கொள்கையை அறிவிக்குமா அல்லது தங்களின் விருப்பத்தை சீன நிறுவனங்களுக்கு அதிகாரப்பூர்வமாக தெரிவிக்குமா என்பது தெளிவாக தெரியவில்லை. முன்னதாக, வரி ஏய்ப்பு, பண மோசடி குற்றச்சாட்டு தொடர்பாக சியோமி அதன் போட்டி நிறுவனமான விவோ, ஒப்போ ஆகிய நிறுவனங்களின் நிதி விவகாரங்கள் குறித்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டு வந்தன. 


Huawei மற்றும் ZTE Corp. தொலைத்தொடர்பு உபகரணங்களை தடை செய்ய அரசாங்கம் முன்பு அதிகாரப்பூர்வமற்ற வழிமுறைகளைப் பயன்படுத்தியது. இருப்பினும், சீன மின்னணு நிறுவனங்களை தடை செய்ய அதிகாரப்பூர்வ கொள்கை எதுவும் வகுக்கப்படவில்லை. இந்த நடவடிக்கை ஆப்பிள் அல்லது சாம்சங் நிறுவனத்தை பாதிக்காது. 


சியோமி, ரியல்மி மற்றும் டிரான்சியன் நிறுவனத்தின் பிரதிநிதிகள் இது தொடர்பாக பதிலளிக்கவில்லை. இந்திய தொழில்நுட்ப அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர்களும் பதிலளிக்கவில்லை.


கடந்த 2020ஆம் ஆண்டு, இந்திய சீன எல்லையில் இரு நாடுகளுக்கிடையே ஏற்பட்ட மோதலில் பத்துக்கும் மேற்பட்ட இந்திய வீரர்கள் இறந்ததை அடுத்து, சீன நிறுவனங்கள் மீது இந்தியா அழுத்தத்தை அதிகரித்தது. இரு நாடுகளுக்கிடையேயான உறவில் விரிசல் ஏற்பட்ட நிலையில், டென்சென்ட் ஹோல்டிங்ஸ் லிமிடெட்டின் வீசாட் மற்றும் பைட் டான்ஸ் லிமிடெட்டின் டிக்டோக் உள்பட 300 க்கும் மேற்பட்ட செயலிகளை இந்தியா தடை செய்தது.


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூட்யூபில் வீடியோக்களை காண