சீனாவில் இருந்து பல துறைகளுக்கும் தேவையான பொருட்கள் இந்தியாவிற்கு இறக்குமதி செய்யப்படுகின்றன. இதில், கண்ணாடி பொருட்கள், பாட்டில்கள், ஜார்கள், உணவுகளை பார்சல் செய்ய பயன்படுத்தப்படும் கண்டெய்னர் ஆகிய பொருட்களும் இறக்குமதி செய்யப்படுகின்றன. இவை பெரும்பாலும் பாலி எத்லீன் டெரப்தலேட்டால் பிசினைப் பயன்படுத்தி உருவாக்கப்பட்டவை.
இந்த பாலித்தீன் டெரப்தலேட் பிசினால் செய்யப்பட்ட பொருட்கள் மற்ற நாடுகளை காட்டிலும் சீனாவில் இருந்தே அதிகளவில் இந்தியாவிற்கு இறக்குமதி செய்யப்படுவதால் ரிலையன்ஸ் மற்றும் துன்செரி பெட்ரோகெம் நிறுவனங்கள் Anti Dumping விசாரணைக்கு விண்ணப்பித்திருந்தனர். இதுதொடர்பாக, வர்த்தக மைய இயக்குநரகம் நடத்திய விசாரணை முடிவுக்கு வந்த நிலையில், அவற்றின் பரிந்துரைகளை மத்திய அரசு ஏற்றுக்கொண்டது. இதையடுத்து, சீனாவில் இருந்து பாலித்தீன் டெரப்தலேட் ரெசினுக்கு மத்திய அரசு தடை விதித்துள்ளது.