அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் பேசினால் சுவாரஸ்யத்திற்கும், சர்ச்சைக்கும் குறைவே இருந்தது இல்லை.  கடந்த ஆண்டு இறுதியில் டொனால்ட் டிரம்ப் மற்றும் ஜோ பிடன் இடையே நடந்த போட்டியும், அதன் பின்னான நிகழ்வுகளும் உலக நாடுகளின் கவனத்தை ஈர்ப்பதாக அமைந்திருந்தது. கடந்த 2020-ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 18-ஆம் தேதி நடந்த தேர்தலில் முன்னாள் அமெரிக்க அதிபர் டிரம்ப் 232 தொகுதிகளில் வெற்றிபெற்றார். அவரை எதிர்த்துபோட்டியிட்ட ஜோ பிடன் 306 தொகுதிகளில் வெற்றிபெற்று அமெரிக்காவின் 46-வது அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.

இதனை தொடர்ந்து அமெரிக்காவின் புதிய அதிபராக ஜோபிடனும் துணை அதிபராக இந்திய வம்சாவளியை சேர்ந்த கமலா ஹாரிஸும் ஜனவரி 20, 2021-இல் பதவியேற்றனர். இந்நிலையில் தனது மார்-அ-லகோ விடுதியில் நடந்த ஒரு திருமண நிகழ்வில், துவக்க உரையாற்றிய முன்னாள் அதிபர் டொனால்ட் டிரம்ப்,  ”என்னை இன்னும் மிஸ் பன்றிங்களா?” என்று கூறி பேசத்தொடங்கிய அவர், ஜோ பிடன் ஆட்சியில் மெக்ஸிகோ எல்லையில் நடக்கும் பிரச்சனைகள், சீனா மற்றும் ஈரான் உள்ளிட்ட விவகாரங்கள் குறித்து தான் பல விஷயங்களையும் கேள்விப்பட்டு வருவதாக பேசியுள்ளார்.

Illegal drugs are surging across the border. #BidenBorderCrisis pic.twitter.com/MVsZyeKiCa
— Ted Cruz (@tedcruz) March 26, 2021

Live footage from the banks of the Rio Grande.#BidenBorderCrisis pic.twitter.com/aO4EyANrRQ
— Ted Cruz (@tedcruz) March 26, 2021

The border crisis is a man-made crisis that is a direct consequence of President Biden’s decisions to stop building the wall, to return to catch and release, and to end the stay in Mexico policy.#SecureTheBorder #BidenBorderCrisis pic.twitter.com/HnwOyZ0HgV
— Senator Ted Cruz (@SenTedCruz) March 26, 2021

சுமார் ஏழு மில்லியன் வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தபோதிலும் நவம்பரில் நடத்த தேர்தலில் சூழ்ச்சி நடந்துள்ளதாக டிரம்ப் அந்த திருமணவிழாவில் பேசினார். அண்மைக்காலமாக மெக்ஸிகோ எல்லையில் போதைப்பொருட்கள் புழக்கம் அதிகரித்துவருவதாக டிரம்பின் ரிபப்ளிகன் கட்சியை சேர்ந்த டெக்சாஸ் மாகாண செனட்டர் டெட் க்ருஸ் தனது ட்விட்டர் பக்கத்தில் தொடர்ச்சியாக பதிவிட்டுவருகிறார்.