உலகம் முழுவதும் கடந்த ஆண்டு கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக கோடிக்கணக்கான மக்கள் உயிரிழந்தனர். அனைத்து நாடுகளும் பல மாதங்களுக்கு முடங்கிய நிலையில் இருந்தன. தற்போது, மீண்டும் கொரோனா பரவல் சில நாடுகளில் அதிகரித்து வருகிறது. கடந்தாண்டு கொரோனா பரவலின்போது, முன்னாள் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், உலக சுகாதார நிறுவனம் கொரோனா பரவலை முறையாக கட்டுப்படுத்த தவறிவிட்டதாக குற்றம் சாட்டினார். ஆனால், உலக சுகாதார அமைப்பு அந்த குற்றச்சாட்டிற்கு மறுப்பு தெரிவித்தது.




கடந்த ஆண்டு நவம்பர் மாதம் நடைபெற்ற G20 உச்சிமாநாட்டில், உலக அளவில் மருந்துகள், தடுப்பூசிகள் சமமான அளவில் கிடைக்க வேண்டியதை உறுதிசெய்ய வேண்டும் என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இந்த நிலையில், கொரோனா தொற்றைப் போலவே, வருங்காலத்தில் ஏதேனும் மருத்துவ அவசர நிலைகள் ஏற்பட்டால், அந்த நேரத்தில் உலக நாடுகள் தங்களுக்குள் உதவிக்கொள்வதற்காக ஒரு சர்வதேச ஒப்பந்தத்தை உருவாக்குவதற்கான முடிவிற்கு 23 நாடுகள் தற்போது ஆதரவு அளித்திருக்கின்றன.




இந்த திட்டத்திற்கு பிஜி, போர்ச்சுகல், ரோமானியா, பிரிட்டன், ருவாண்டா, கென்யா, பிரான்ஸ், ஜெர்மனி, கிரீஸ், கொரியா, சிலி, கோஸ்டா ரிகா, அல்பேனியா, தென் ஆப்பிரிக்கா, டிரினாட் மற்றும் டொபோகா, நெதர்லாந்து, துனிசியா, செனகல், ஸ்பெயின், நார்வே, செர்பியா, இந்தோனிசியா, உக்ரைன் ஆகிய நாட்டு தலைவர்கள் ஆதரவு அளித்தனர்.