மனிதாபிமான அடிப்படையில் 21,000 டன் உரத்தை இலங்கைக்கான இந்திய தூதர் கோபால் பார்க்கலே,இலங்கை அரசிடம் ஒப்படைத்தார்.இது நட்பு நாடான இலங்கைக்கு இந்தியா வழங்கும் உதவியாகும்.


கொரோனாவுக்கு பிந்தைய காலகட்டத்தில்,உலகளாவிய அளவில் பல அரசாங்கங்கள் பொருளாதார மந்த நிலையில் சிக்கி தவிக்கின்றன. இதிலும் குறிப்பாக இலங்கை ஆனது திவால் நிலைக்கு சென்று விட்டது. இந்தியாவின் சுதந்திரத்திற்கு முன்பு பாகிஸ்தான்,ஆப்கானிஸ்தானில் சில பகுதிகள்,பங்களாதேஷ்,நேபால், பூட்டான் மட்டும் இலங்கை என இன்று பிரிந்து கிடக்கின்ற. பல நாடுகள் இந்தியா என்ற ஒரே குடையின் கீழ் இங்கிலாந்தால் ஆட்சி செய்யப்பட்டது.


சுதந்திரத்திற்கு பிறகு ஒவ்வொன்றும் தனித்தனியாக பிரிந்து சென்று விட்ட பொழுதிலும்,இங்கு இருக்கும் மக்கள் அடிப்படையில் ஒருவருக்கு ஒருவர் உறவினர்களாகவும் நண்பர்களாகவும் இருக்கிறார்கள்.


இதன் பொருட்டும்,நட்பு நாடுகள் என்ற அடிப்படையிலும் மற்றும் இந்திய பெருங்கடலில் தனது பாதுகாப்பை பலப்படுத்துவதற்காகவும் இலங்கைக்கு இந்தியாவானது நிறைய உதவிகளை செய்து வருகிறது. அந்த வகையில் சமீபத்தில் கூட அரபு நாடுகள் எரிபொருள் தர மறுத்தபோது கூட இந்தியா, மைதாபிமான நல்லெண்ண அடிப்படையில் எரிபொருளை வழங்கி உதவியது.


அது மட்டுமல்லாது இந்தியா பண ரீதியான உதவிகளையும் வழங்கி வருகிறது.அந்த வகையில் திங்கட்கிழமை, இந்தியாவிற்கான இலங்கை தூதர் கோபால் பாக்லே 21,000 டண்  உரத்தை வழங்கியுள்ளார். இந்தியா இலங்கை மீதான தனது நட்பையும் அன்பையும் மீண்டும் ஒருமுறை இதன் மூலம் நிரூபித்துள்ளது.


இது பற்றி இலங்கைக்கான இந்திய தூதரகம் வெளியிட்டுள்ள ட்விட்டரில்,
இது இலங்கை விவசாயிகளின் பாதுகாப்பிற்கும்  நம்பிக்கைக்கு இந்தியா வழங்குகின்ற பங்களிப்பாகும். இந்தியாவுக்கும் இலங்கைக்குமான நல்லுறவு நட்பு ஆகியவற்றின் மூலம் இலங்கையின் மக்களுக்கு கிடைத்துக் கொண்டிருக்கின்ற மிகப்பெரிய நன்மைகள் ஆகும் என்று அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.


இதைப்போலவே கடந்த மாதம் 44 ஆயிரம் டண் உரத்தை இந்தியா வழங்கி இருப்பதும் குறிப்பிடத்தக்கது.


இலங்கையின் முந்தைய பிரதமர் கோத்தபாய ராஜபக்ச, நாட்டை இயற்கை விவசாய சூழ்நிலைக்கு கொண்டு செல்வதற்காக, உரங்களுக்கு கட்டுப்பாடுகளை விதித்து,மக்கள் உடனடியாக இயற்கை விவசாயத்திற்கு திரும்ப வலியுறுத்தினார். இதனால் உணவு சங்கிலியில் 50 சதவிகிதம் விளைச்சல் தடைபட்டது. இதுவும் இலங்கையின் இன்றைய பொருளாதார சீர்குலைவுக்கு மிக முக்கிய காரணமாகும்.


இத்தகைய நாடு தழுவிய அளவில் இயற்கை விவசாய முறைக்கு திரும்ப,  குறைந்தது 5 வருடங்கள் அல்லது 10 வருடங்களில் படிப்படியாக கொண்டு செல்ல வேண்டிய திட்டமாகும். அதிரடியாக ஒரே வருடத்தில் நாடு தழுவிய அளவில் இயற்கை விவசாயம் முறைக்கு திரும்ப முடியாது என்றும் இது தவறான முடிவு என்பதையும் ராஜபக்ச பின்னர் ஒப்புக்கொண்டார்.


ஏனெனில் இலங்கை, விவசாயத்தை நம்பி இருக்கின்ற ஒரு நாடாகும். இங்கு பெரிய அளவில்  இரும்பு உருக்கு ஆலைகளோ,ஆடை தொழிற்சாலைகளோ, தோல் பதனிடம் தொழிற்சாலைகள் என தொழிற்சாலைகள் சார்ந்த நாடு அல்ல.மீன்பிடி மற்றும் தேயிலை போன்று விவசாயத்தை சார்ந்திருக்கும் நாடாகும்.


இலங்கையின் நகரங்களை தாண்டி கிராமங்களில் இன்னும் தற்சார்பு பொருளாதாரமே இருக்கிறது. ஒரு வீட்டிற்கு தேவையான பொருட்கள் அனைத்தும் அவர்களுடைய விலை நிலங்களில் இருந்தோ அல்லது காய்கறிகள் வீட்டின் தோட்டங்களில் இருந்தோ அவர்களுக்கு கிடைக்கும்.


இப்படியாக இலங்கையின் உயிர்நாடியான விவசாயம் பாதிக்கு  நின்று போனதன் காரணத்தினாலும், மோசமான பொருளாதாரக் கொள்கையாளும் மற்றும் உலகளாவிய அளவில் ஏற்பட்ட கொரோனா பொருளாதார நெருக்கடியாலும் திவால் நிலைக்கு சென்றது.ஆகையால் அங்கு  அத்தியாவசிய பொருட்கள் பற்றாக்குறை,உணவுப் பொருட்கள் பற்றாக்குறை மற்றும் எரிபொருள் தட்டுப்பாடு என இலங்கை மக்கள் வரலாறு காணாத அளவிற்கு துன்பத்தில் சிக்குண்டு இருக்கிறார்கள்.


இலங்கை மக்களின் உணவு, சுகாதாரம்,மருத்துவம், எரிபொருள் ஆகியவற்றிற்கு நல்லெண்ண அடிப்படையில் இந்தியா 3.5 பில்லியன் டாலர்களை  படிப்படியாக வழங்கி உள்ளது. இதைப் போலத்தான் நாட்டின் உயிர்நாடியான விவசாயத்தை பாதுகாப்பதற்கும், இலங்கை மக்களின் அடிப்படை வாழ்வாதாரத்தை கட்டமைப்பதற்கும், இந்தியா இப்படிப்பட்ட உதவிகளை செய்து வருகிறது. 


இதில் மே மாதத்தில் இருந்து ஆகஸ்ட் மாதம் வரையிலான நெல் சாகுபடி நேரத்தை கணக்கில் கொண்டு 65,000 டன் உரத்தை தர இந்தியா ஒப்புக் கொண்டு  அந்த உரத்தை படிப்படியாக தற்போது வழங்கி வருகிறது.


 இலங்கையானது வருடம் முழுமைக்குமான தனது விவசாய தேவைக்கு 600 மில்லியன் டாலர் அளவிற்கு உரங்களை இறக்குமதி செய்கிறது.
 இது எப்படி இருப்பினும், இந்தியா வழங்கும் இந்த மனிதாபிமான நடவடிக்கைகளை ஆகச் சிறப்பாக பயன்படுத்திக் கொண்டு, இலங்கையில் இருக்கும் அரசியல்வாதிகளும், அதிகாரிகளும் கடை மட்டத்தில் இருக்கும் விவசாயிகள் வரை இந்த உரங்களை  கொண்டு சேர்த்து,விவசாயத்தை செழிக்க வைக்க நடவடிக்கை எடுக்கலாம்.


இந்த ஆண்டு ஜனவரியில் இருந்து கடன்கள் மற்றும் பொருளாதார நெருக்கடிகள் சிக்கி உள்ள இலங்கைக்கு இந்தியா சுமார் 4 பில்லியன் டாலர்களை வழங்கி உதவி செய்துள்ளது