கடந்த இரண்டு வாரங்களுக்கு முன்னதாக இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்ஸன், இரண்டு நாள் சுற்றுப்பயணமாக இந்தியா வந்திருந்தார். அந்த இரண்டு நாள் வருகை இங்கிலாந்து நாடாளுமன்றத்தில், எதிர்வினைகளை ஏற்படுத்தியுள்ளது.


இங்கிலாந்து பிரதமர் போரிஸ்  கடந்த ஏப்ரல் மாதம் இறுதியில் இந்தியா வந்திருந்தார். அவர் அதிபராக பதவி ஏற்றுக்கொண்ட பிறகு , இந்தியா  வருவது இதுவே முதல் முறை . இங்கிலாந்தில் இருந்து தனி விமானம் மூலம் நேரடியாக குஜாராத் மாநிலம் அகமதாபாத்திற்கு வந்த அவருக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. பின்னர் பிரதமர் மோடியும் , அதிபர் போரிஸ் ஜான்ஸனும் இரு நாடுகளுக்கு இடையேயான வணிகம் , பாதுகாப்பு குறித்த பேச்சுவார்த்தையில் ஈடுபட்டதாக செய்திகள் வெளியானது. குஜராத்திற்கு வந்த அதிபர் போரிஸ் ஜான்ஸன் , இங்கிலாந்து அரசுக்கு சொந்தமான JCB வாகன தொழிற்சாலையை பார்வையிட்டார். அப்போது அவர் எடுத்துக்கொண்ட புகைப்படங்கள் இணையத்தில் வைரலானதை தொடர்ந்து , போரிஸ் மீதும் பல்வேறு விமர்சனங்கள் எழ தொடங்கின. ஏனென்றால் போரிஸ் இந்திய வருகைக்கு சில நாட்களுக்கு முன்னதாகத்தான் , இஸ்லாமியர்களின் வீடுகளை , ஆளும் பாஜக அரசு JCB இயந்திரம் கொண்டு இடித்து தள்ளியதாக குற்றச்சாட்டு எழுந்தது. அது குறித்த கேள்விகளை எழுப்பாமல் , போரிஸ் இப்படி JCB இல் போஸ் கொடுத்துக்கொண்டிருக்கிறாரே , என நெட்டிசன்கள் சரமாரியாக விமர்சிக்க தொடங்கினர். 






 


இந்த நிலையில் இந்த சர்ச்சை தற்போது இங்கிலாந்து நாடாளுமன்றத்திலும் எதிரொலித்துள்ளது. ஸ்காட்லாந்து தேசியக் கட்சி (எஸ்என்பி) நாடாளுமன்ற உறுப்பினர் இயன் பிளாக்ஃபோர்ட் செவ்வாயன்று ஹவுஸ் ஆஃப் காமன்ஸில் தாக்கல் செய்த ‘அவசரக் கேள்வி’யின் போது, ​​எதிர்க்கட்சிகள் “அவர் எங்கே?”  என்று போரிஸுக்கு எதிராக கூக்குரலிட்டனர்.பின்னர் "பிரதமரின் இந்திய வருகை" என்ற தலைப்பில் 
இந்திய வம்சாவளி நாடியா விட்டோம் உட்பட  இளம் தொழிற்கட்சி எம்.பி.க்கள் கேள்வி எழுப்பினர்.





அதில் “சமீபத்தில் வடமேற்கு டெல்லியில்  இஸ்லாமியர்களின்  சொத்துக்களை , ஆக்கிரமிப்பு எதிர்ப்பு என்ற பெயரில் ஆளும் பி.ஜே.பி அரசு இடித்தது. அதில் JCB நிறுவனத்தின் உபகரணத்தை பயன்படுத்திய போதிலும் , ஏன் போரிஸ் அது குறித்த கேள்விகளை இந்திய பிரதமரிடம் எழுப்பவில்லை “என்று சுட்டிக்காட்டி பேசினர். எதிர்கட்சிகளின் கேள்விகளுக்கு பதிலளிக்க ,வெளியுறவு, காமன்வெல்த் மற்றும் மேம்பாட்டு அலுவலகத்தின் (FCDO) துணை செயலாளரான விக்கி ஃபோர்ட், அரசாங்கத்தின் சார்பாக நியமிக்கப்பட்டார்.
கேள்விகளுக்கு பதிலளித்த அவர் ”அதிபரின் இந்திய வருகை , இங்கிலாந்து - இந்தியா இடையிலான வர்த்தகத்தில் மேம்பட்ட மாற்றங்களை கொண்டு வரப்போகிறது. மனித உரிமைகளும்  இங்கு சமமாக மதிக்கப்படுகிறது என்றார். தொடர்ந்து எதிர்கட்சிகள் முறையான விளக்கங்களை கேட்டு , மீண்டும் மீண்டும் அதே கேள்விகளை முன்வைக்க தொடங்கினர் . இதற்கு பதிலளித்த ஃபோர்ட் , "நாங்கள் மனித உரிமைகளைத் தவிர்த்து வர்த்தகத்தைத் தொடரவில்லை. எங்கள் பார்ட்னருடன்  ஆழமான, முதிர்ந்த மற்றும் பரந்த அளவிலான உறவை நாங்கள் முக்கியமாக கருதுகிறோம். இந்தியா உடனான கூட்டு இரு நாடுகளுக்கும் முக்கியத்துவம் வாய்ந்தது என்றார்.தொடர்ந்து பேசிய அவர் “ மேலும் இது குறித்து எங்களுக்கு அக்கரை இருக்கும் பட்சத்தில், நாங்கள் அவற்றை நேரடியாக இந்திய அரசிடம் தெரிவிக்கிறோம். எங்கள் துணை உயர் கமிஷன்களின் நெட்வொர்க் தொடர்ந்து அறிக்கைகளை நெருக்கமாகப் பின்பற்றும், அதே நேரத்தில் இது இந்தியாவுக்கு சம்பந்தப்பட்ட விவகாரம் என்பதை நாங்கள் அறிவோம் “ என்றார் விக்கி ஃபோர்ட் .