பிரதமர் மோடி ஐரோப்பிய நாடுகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். அதில் பிரதமர் மோடி இன்று அதிகாலை டென்மார்க் நாட்டிற்கு சென்றார். அங்கு அவருக்கு டென்மார்க் அரசு சார்பிலும் இந்திய மக்கள் சார்பிலும் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. அதன் ஒரு பகுதியாக டோல் இசைக் கலைஞர்கள் சுற்றி வரிசையாக நின்று அக்கருவியை இசைத்து பிரதமர் மோடிக்கு உற்சாக வரவேற்பை அளித்தனர். 


 


இந்நிலையில் அவர்களுடன் பிரதமர் மோடியும் சேர்ந்து ஒரு கையில் டோல் கருவியை இசைத்து மகிழ்ந்தார். அவர்கள் இசைக் கலைஞர்களுக்கு மத்தியில் ஒரு கையில் டோல் இசைப்பது தொடர்பான வீடியோ இணையத்தில் வேகமாக வைரலாகி வருகிறது. இந்த வீடியோவை பலரும் பார்த்து ரசித்து வருகின்றனர். 


 






இந்த வரவேற்பை தொடர்ந்து பிரதமர் மோடி டென்மார்க் பிரதமரை சந்தித்து உரையாடினார். அதன்பின்னர் இந்தியா-டென்மார்க் இடையே சில முக்கியமான ஒப்பந்தங்கள் கையெழுத்தானது. அதைத் தொடர்ந்து டென்மார்க் ராணியை பிரதமர் மோடி சந்தித்தார். டென்மார்க் ராணி சார்பில் அவருக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. 50 ஆண்டுகளில் ஆட்சிக்காலத்தை நிறைவு செய்துள்ள டென்மார்க் ராணிக்கு பிரதமர் மோடி தனது வாழ்த்துகளை தெரிவித்தார். 


அதன்பின்னர் இந்தியர்கள் மத்தியில் உரையாற்றிய பிரதமர் மோடி, “பன்முக தன்மை தான் இந்தியர்களின் முக்கியமான சிறப்பு அம்சம். இந்தியர்கள் எந்த மொழி பேசினாலும் அவர்களுக்குள் இருக்கும் இந்தியர் என்ற உணர்வு தான் சிறப்பானது. நான் எந்த நாட்டு தலைவர்களை சந்தித்தாலும் அவர்கள் என்னிடம் கூறுவது ஒன்று தான். அதாவது அந்த நாட்டின் வளர்ச்சிக்கு இந்தியர்கள் எப்போதும் உறுதுணையாக இருப்பார்கள் என்று கூறுவார்கள்” எனக் கூறினார். அடுத்தக்கட்டமாக பிரதமர் மோடி பிரான்ஸ் நாட்டிற்கு செல்கிறார். அதைத் தொடர்ந்து அவர் மீண்டும் இந்தியா திரும்புகிறார்.




மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடியூபில் வீடியோக்களை காண