பூமியின் புவியியலின் இரகசியங்களை கண்டறியும் முயற்சியில் ஆராய்ச்சியாளர்கள் கிரகத்தின் ஐந்தாவது அடுக்கை வெளிப்படுத்தியுள்ளனர்.
பூகம்பங்களால் உருவாகும் நில அதிர்வு அலைகள் பூமியின் உள் மையத்தின் ஆழமான பகுதிகள் பற்றிய புதிய நுண்ணறிவுகளை வெளிப்படுத்தியுள்ளன. ஆஸ்திரேலிய தேசிய பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் குழு, இந்த நில அதிர்வு அலைகள் பூமியின் உள் மையத்தில் ஊடுருவிச் செல்லும் வேகத்தை அளந்தது. இது பூமிக்குள் உள்ள உள் மையமாக அறியப்படும் ஒரு தனித்துவமான அடுக்குக்கான ஆதாரத்தை முன்வைத்துள்ளது என ஆராய்ச்சியாளர்கள் நம்புகின்றனர். கடந்த 10 ஆண்டுகளில் சுமார் ரிக்டர்-6 மற்றும் அதற்கு மேற்பட்ட 200 நிலநடுக்கங்களின் தரவுகளை ஆராய்ச்சியாளர்கள் ஆய்வு செய்தனர்.
கண்டுபிடிக்கப்பட்ட இந்த அடுக்கு ஒரு திடமான 'உலோக பந்து' ஆகும், இது உள் மையத்தின் மையத்தில் உள்ளது. இந்த ஆய்வின் கண்டுபிடிப்புகள் நேச்சர் கம்யூனிகேஷன்ஸ் இதழில் வெளியிடப்பட்டுள்ளன. இது பூமியின் மையத்தை ஆய்வு செய்வது, கிரக உருவாக்கம் மற்றும் பரிணாம வளர்ச்சியைப் புரிந்துகொள்வதற்கு முக்கியமானது என கூறப்படுகிறது. "சுமார் 20 ஆண்டுகளுக்கு முன்னரே, உள் மையத்தின் உட்பகுதியில் உலோகப் பந்து இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது . இந்த கண்டுபிடிப்பை நிரூபிக்க நாங்கள் இப்போது மற்றொரு ஆதாரத்தையும் வழங்கியுள்ளோம்" என ANU ரிசர்ச் ஸ்கூல் ஆஃப் எர்த் சயின்ஸைச் சேர்ந்த டாக்டர் தான்-சன் ஃபாம் கூறியுள்ளார்.
இதுவரை, பூமியின் கட்டமைப்பின் நான்கு அடுக்குகள் அடையாளம் காணப்பட்டுள்ளன. க்ரஸ்ட், மேன்டில், outer core மற்றும் inner core ஆகும் . தற்போது புதிய அடுக்கு அதாவது ஐந்தாவது அடுக்கு கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. பூமியின் மையத்தின் வழியாக நேரடியாக பயணிக்கும் நில அதிர்வு அலைகளை இந்த ஆய்வுக்குழு மதிப்பீடு செய்தது. இந்த அலைகள் நிலநடுக்கம் உருவான இடத்திலிருந்து பூகோளத்தின் எதிர் பக்கத்தில் வெளிவந்து, மீண்டும் நிலநடுக்கம் உருவான பகுதிக்கு திரும்பிச் செல்வதை கண்டறியப்பட்டது. அலாஸ்காவில் உருவான நிலநடுக்கம் குறித்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. அலாஸ்காவிற்கு நில அதிர்வு அலைகல் திரும்புவதற்கு முன், தெற்கு அட்லாண்டிக் பெருங்கடலில், அலைகள் மொதிச் சென்றது.
"பெருகிவரும் உலகளாவிய நில அதிர்வு நிலையங்களால் பதிவுசெய்யப்பட்ட அலைவடிவங்களை அடுக்கி வைப்பதன் மூலம், பூமியின் விட்டத்தில் தேர்ந்தெடுக்கப்பட்ட பூகம்பங்களில் இருந்து ஐந்து மடங்கு வரை எதிரொலிக்கும் அலைகளை நாங்கள் அவதானிக்கிறோம்" என்று குறிப்பிடப்பட்டிருந்தது. பூமியின் உள் மையத்தின் உட்புறத்தை உள்ளடக்கிய இரும்பு-நிக்கல் கலவையின் (metallic ball) அனிசோட்ரோபியை ஆராய்ச்சியாளர்கள் ஆய்வு செய்தனர். நில அதிர்வு அலைகள் அவை பயணிக்கும் திசையைப் பொறுத்து, பூமியின் உள் மையத்தின் பொருள் வழியாக எவ்வாறு பயணிக்கிறது என்பதை விவரிக்க அனிசோட்ரோபி பயன்படுத்தப்படுகிறது.
பூமியின் மையத்திற்கு அருகிலுள்ள இடங்களை வெவ்வேறு கோணங்களில் இருந்து நில அதிர்வு அலைகள் மீண்டும் மீண்டும் ஆய்வு செய்ப்படுவதை கண்டறியப்பட்டது. வெவ்வேறு நிலநடுக்கங்களுக்கான நில அதிர்வு அலைகளின் பயண நேரங்களின் மாறுபாட்டை குழு ஆய்வு செய்தது. உள் மையத்தின் உட்பகுதியில் படிகப்படுத்தப்பட்ட அமைப்பு வெளிப்புற அடுக்கிலிருந்து வேறுபட்டிருக்கலாம் என்று அவர்கள் கண்டறிந்தனர். பூமியின் பரிணாம காலவரிசையின் போது ஒரு கட்டத்தில் ஒரு பெரிய உலகளாவிய நிகழ்வு இருந்திருக்கலாம் என்றும், இதனால் இது உள் மையத்தின் படிக அமைப்பில் குறிப்பிடத்தக்க மாற்றத்திற்கு வழிவகுத்தது என்றும் ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.