கடந்த பனி யுகத்தின் முடிவில் இருந்ததாக நம்பப்படும் மனித கால்தடங்களை ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர்.


இறந்தகாலம் தொடர்பான பல ஆராய்ச்சிகளை உலகெங்கும் ஆய்வாளர்கள் தொடர்ந்து வருகின்றனர். தொல்லியியல் ஆராய்ச்சிகள், ஆய்வுகள் என பல பரிமாணங்களில் இந்த ஆராய்சிகள் தொடர்ந்து வருகிறது. இந்நிலையில் உட்டா பாலைவனத்தில் பேயின் கால்தடங்கள் என கூறப்படும் மர்ம கால்தடம் தொடர்பான ஆராய்ச்சியில் ஆய்வாளர்கள் சில தகவல்களை சேகரித்துள்ளனர்.






ஃபார் வெஸ்டர்ன் மானுடவியல் ஆராய்ச்சிக் குழுவைச் சேர்ந்த அர்பன் மற்றும் டேரன் டியூக் இந்த அரிய தகவல்களை கண்டறிந்துள்ளனர். ஆராய்ச்சிக்காக உட்டா பாலைவனத்தின் பயணம் செய்த போது பேயின் கால்தடங்கள் என அழைக்கப்படும் திடீரென தோன்றி மறையும் கால்தடங்களை ஆய்வாளர்கள் கண்டறிந்துள்ளனர். குறிப்பிட்ட ஈரப்பதம் இருந்தால் கண்ணுக்கு புலப்படும் இந்த கால்தடங்கள் சற்று வெப்பம் அதிகரித்தால் கண்ணுக்கு புலப்படாது. இப்படியாக திடீர் திடீரென தோன்றி மறைவதால் பலரும் இதனை பேயின் கால்தடங்கள் என கூறுகின்றனர்.




இந்நிலையில் ஆராய்ச்சியாளர்களின் கண்ணில் சிக்கியதை அடுத்து அந்த கால்தடங்கள் இருந்த குறிப்பிட்ட பகுதி ஆய்வின்கீழ் கொண்டுவரப்பட்டது. இது ஒரு தற்செயலான கண்டுபிடிப்பு எனக் கூறியுள்ள ஆராய்ச்சியாளர்கள் அப்பகுதிக்குச் சென்று ஆய்வை மேற்கொண்டனர். ஆய்வில் அது  கடந்த பனி யுகத்தின் முடிவில் இருந்ததாக நம்பப்படும் மனித கால்தடங்கள் என கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. சுமாராக 12ஆயிரம் வருடங்களுக்கு முன்பு வாழ்ந்த மனித இனத்தின் கால்தடம் என கூறப்பட்டுள்ளது. 88 கால்தடங்கள் கண்டிபிடிக்கப்பட்டுள்ள நிலையில் அதில் சிறுவர்கள், குழந்தைகள், பெரியவர்களின் கால்தடங்கள் இருந்துள்ளன. அந்த காலத்திலேயே குடும்பங்கள் வாழ்ந்ததற்கான ஆதாரத்தை இந்த கால்தடங்கள் தருவதாக ஆய்வாளர்கள் குறிப்பிட்டுள்ளனர்.


குறிப்பிட்ட இடமானது குறிப்பிட்ட மணல் மற்றும் ஈரம் சேர்ந்த சேற்றுப்பகுதியாக இருந்திருக்கும் இன்றும் அப்போது நடந்து சென்ற கால்தடங்கள் அடுத்து மணல் படிந்து படிமானமாக மாறி அப்படியே இறுகி இன்னும் அப்படியே இருந்திருக்கலாம் எனவும் கூறுகின்றனர் ஆராய்ச்சியாளர்கள். கிட்டத்தட்ட 10ஆயிரம் ஆண்டுகளாக ஈரப்பதமற்ற பகுதியாக அந்த இடம் இருப்பதால் அந்த கால்தடங்கள் அப்படியே இருப்பதாகவும் கூறப்படுகிறது.


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூட்யூபில் வீடியோக்களை காண