ஆப்பிள் வாட்ச் பல சந்தர்ப்பங்களில் உயிரை காக்கும் சாதனமாக இருக்கிறது என்பது மீண்டும் ஒரு முறை நிரூபிக்கப்பட்டுள்ளது. இதயத் துடிப்பு, ஈசிஜி மற்றும் பலவற்றை அளவிடும் சென்சார்களைப் பயன்படுத்தி, பயனர்களின் ஆரோக்கியத்தில் உள்ள அசாதாரணங்கள் மற்றும் உயிருக்கு ஆபத்து ஏற்படும் நிலையினைக்  கண்டறிந்து, உயிர்களைக் காப்பாற்றியது பற்றி பல சம்பவங்கள்  இதற்கு முன்னர் நடைபெற்றுள்ளது.  இதுபோன்ற ஒரு சமீபத்திய சம்பவத்தில், இங்கிலாந்தில் உள்ள ஒரு பெண், ஆப்பிள் வாட்ச் தனக்கு தெரியாத இதய நிலை குறித்து எச்சரித்ததால் தனது உயிரைக் காப்பாற்றியதாகக் கூறினார்.  


மான்செஸ்டர் ஈவினிங் நியூஸ் செய்தியின்படி , 59 வயதான எலைன் தாம்சன் வலிப்புத்தாக்கங்களால் அவதிப்பட்ட பிறகு 2022 முதல் தனது உடல்நிலையைக் கண்காணிக்க கேட்ஜெட்டைப் (ஆப்பிள் வாட்ச்) பயன்படுத்தினார். கடிகாரம் சமீபத்தில் எலைன் தாம்சனின் இதய துடிப்பில் ஏதோ தவறு இருப்பதைக் கண்டறிந்து, அதனால் ஏற்படும் சிக்கல் குறித்து அவரை எச்சரித்தது.  இதனால் அவர் உடனடியாக ஒரு இருதயநோய் நிபுணரைச் சந்தித்தார், இதனால் அவருக்கு ஒரு வாரத்திற்கு இதயத் துடிப்பு மற்றும் செயல்பாடு குறித்து கண்காணிக்கப்பட்டது. ஒரு சந்தர்ப்பத்தில்,  இதயத்தின் துடிப்பு குறித்து மானிட்டர் எச்சரிக்கை செய்தது, அதில் எலைன் தாம்சன்  தூக்கத்தில் 19 வினாடிகள் பிளாட்லைன் செய்ததாக குறிப்பிட்டுள்ளது.  


உடனே எலைன்  தாம்சன் மருத்துவமனைக்கு விரைந்தார், அங்கு மருத்துவர்கள் அவருக்கு இதயத்தில் ஒரு ஏட்ரியோவென்ட்ரிகுலர் பிளாக் இருப்பதைக் கண்டறிந்தனர், இதனால் இதயம் மெதுவாகவும் அசாதாரணமாகவும்  துடிக்கிறது. NHS படி, இது ஒரு கடுமையான நிலை மற்றும் சில நேரங்களில் மருத்துவ அவசரநிலை என வகைப்படுத்தலாம் எனவும் மருத்துவர்கள் கூறியுள்ளனர். 


"என் மகள் எனக்கு போன் செய்து, நான் அவசரமாக மருத்துவமனைக்குச் செல்ல வேண்டும்” என்று என்னிடம் சொன்னாள் என எலைனின் பெற்றோர் கூறியுள்ளனர். மேலும், மருத்துவர்கள் என்னைப் பிடிக்க முயன்றனர். நான் உள்ளே சென்றேன், நான் 19 வினாடிகள் சுயநினைவு இல்லாமல்  இருந்தேன் என்று எனது முடிவுகள் காட்டுகின்றன என்று அவர்கள் என்னிடம் சொன்னார்கள். என் இதயத்தில்  கோளாறு ஏற்பட்டுள்ளது. எலைன் தாம்சன் பெண் இப்போது தனது ஆப்பிள் வாட்ச் சிக்கலை முதலில் தனக்குத் தெரியப்படுத்தியதாகக் கூறியுள்ளார்.  


 "இது என் உயிரைக் காப்பாற்றியது. நான் விழிப்புடன் இருந்திருக்காவிட்டால், நான் மருத்துவரிடம்  வந்திருக்க முடியாது. மேலும், மருத்துவரிடம் நடந்ததை விளக்கியிருக்க முடியாது.  இப்போது நான் எல்லா நேரங்களில் ஆப்பிள் வாட்சை அணிந்துகொள்கிறேன். நான் இறந்திருக்கலாம் என்று தெரிந்தும் மிகவும் பயமாக இருந்தது" என்று அவர் மேலும் கூறினார். 


மற்றொரு சமீபத்திய சம்பவத்தில், ஆப்பிள் வாட் 16 வயது சறுக்கு வீரரின் உடலில் குறைந்த இரத்த ஆக்ஸிஜன் செறிவூட்டலைக் கண்டறிந்து சரியான நேரத்தில் சிகிச்சை பெற உதவியது. குறிப்பிடத்தக்க வகையில், கடிகாரத்தின் இரத்த ஆக்ஸிஜன் சென்சார் பயனர்களின் இரத்தத்தில் உள்ள ஆக்ஸிஜன் அளவை அவர்களின் மணிக்கட்டில் கட்டியிருக்கும்போது அளவிட முடிகிறது. 


தொடர்ந்து பயனர்களின் உயிரைக் காக்கும் சாதனமாக ஆப்பிள் வாட்ச் மாறியுள்ளதால் அதற்கு சந்தையிலும் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது.